பாலிவுட் இளம் நடிகையின் தந்தை திடீரென காலமானார்… அஞ்சலி செலுத்திய திரைபிரபலங்கள் !

சென்னை : பாலிவுட்டில் பிரபல கதாநாயகியாக வலம் வரும் ஆக்காங்ஷா சிங்கின் தந்தை க்யான் பிரகாஷ் நேற்று காலமானார்.

இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார் ஆக்காங்ஷா சிங்.

நடிகையின் தந்தை மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொலைக்காட்சி தொடரில்

தொலைக்காட்சி தொடரில்

தொலைக்காட்சி நடிகையான ஆக்காங்ஷா சிங், கலர் இந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான Na bole Tum Na Maine Kuch Kaha என்ற நெடுந்தொடரில் நடித்து அனைத்து தரப்பு மக்களின் மனதில் இடம் பிடித்தார். இந்த சீரியலில் மக்களின் மனதை வென்றதால், Na bole Tum Na Maine Kuch Kaha 2ம் பாகத்திலும் நடித்தார் அந்த தொடரும் வெற்றி வாகை சூடியது.

குறும்படங்களில்

குறும்படங்களில்

திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றியை அடுத்து ஒரு சில குறும்படங்களிலும் நடித்தார். இந்த குறும்படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தன. இதையடுத்து, Badrinath Ki Dulhania என்ற இந்தி திரைப்படத்திலும், Malli Raava, Devadas தெலுங்கு திரைப்படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார்.

கன்னட படத்தில்

கன்னட படத்தில்

கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப்புடன் கதாநாயகியாக நடித்து கன்னடத்திரையிலும் தனது தடத்தை பதித்தார் ஆக்காங்ஷா சிங். பயில்வான் திரைப்படத்தில் இவர் நடித்த ருக்மணி கதாபாத்திரம் இவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. இதையடுத்து, கன்னட திரைத்துறையிலும் திறமையான நடிகை என பெயர் எடுத்தார்

கிளாப் படத்தில் ஹீரோயின்

கிளாப் படத்தில் ஹீரோயின்

நடிகர் ஆதி கதாநாயகனாக நடித்து விரைவில் வெளியாக இருக்கும் கிளாப் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். தடகள விளையாட்டை மையப்படுத்தி உருவாகி உள்ள கிளாப் படத்தை பிரித்வி ஆதித்யா கதை எழுதி இயக்கி உள்ளார். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

ஆக்காங்ஷா சிங்கின் தந்தை மறைவு

ஆக்காங்ஷா சிங்கின் தந்தை மறைவு

இந்நிலையில் நடிகை ஆக்காங்ஷா சிங்கின் தந்தை க்யான் பிரகாஷ்சிங் நேற்று உயிரிழந்தார். தனது தந்தையின் மறைவு குறித்து ஆக்காங்ஷா தனது விட்டர் பக்கத்தில் அதை வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார். நடிகையின் தந்தை மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்தும் அவருக்கு ஆறுதல் கூறியும் வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: aakanksha singh actress bollywood
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X