»   »  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டிவி தொகுப்பாளினி "டிரிங் டிரிங்" மல்லிகா மரணம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டிவி தொகுப்பாளினி "டிரிங் டிரிங்" மல்லிகா மரணம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
பிரபல டிவி நடிகை திடீர் மரணம்-வீடியோ

பெங்களூர்: பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியும், நடிகையுமான மல்லிகா உடல்நலக்குறைவு காரணமாக இன்று பெங்களூரில் மரணம் அடைந்தார்.

தெலுங்கு டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானவர் மல்லிகா. அதன் பிறகு அவர் பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். ரசிகர்களால் செல்லமாக ட்ரிங் ட்ரிங் மல்லிகா என்று அழைக்கப்பட்டவர்.

Popular TV anchor Mallika no more

மல்லிகா தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார். திருமணமான அவருக்கு ஒரு மகள் உள்ளார். கணவர் பெங்களூரில் வேலை செய்வதால் மல்லிகா அங்கு வசித்து வந்தார்.

இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக மல்லிகா பெங்களூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 2 வாரங்களாக அவர் கோமாவில் இருந்தார்.

கோமாவில் இருந்த மல்லிகா இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 39. அவரின் இறுதிச் சடங்கு நாளை ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.

English summary
Popular TV anchor cum actress Mallika passed away in Bangalore on monday. She was in coma for the past two weeks.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil