சுந்தர்.சி படத்தில் இணைந்த பிரபல தொகுப்பாளினி...ஹீரோ யாரு தெரியுமா ?

சென்னை : டைரக்டர் சுந்தர்.சி இயக்கி வரும் புதிய படத்தில் பிரபல டிவி தொகுப்பாளினி ஒருவரும் நடிக்கிறாராம். இதனை சுந்தர்.சி மற்றும் ஹீரோக்களுடன் இணைந்து எடுத்துக் கொண்ட போட்டோவுடன் அந்த தொகுப்பாளினியே சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

டைரக்டர் சுந்தர்.சி புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் ஜனவரி இறுதியில் துவங்கி, கடந்த ஒரு மாதமாக ஊட்டியில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை குஷ்புவின் தயாரிப்பு நிறுவனம் தான் தயாரிக்கிறது.

ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, மாளவிகா சர்மா, அமிர்தா ஐயர் நடித்து வரும் இந்த படம், குடும்ப பொழுதுபோக்கு படமாக எடுக்கப்பட்டு வருகிறது. இதில் லேட்டஸ்ட் வரவாக பிரபல டிவி தொகுப்பாளினியும், நடிகையுமான டிடி என்ற திவ்யதர்ஷினியும் நடிக்கிறாராம். இந்த படத்தில் முக்கிய ரோல் ஒன்றில் டிடி நடிக்கிறாராம்.

Popular TV celebrity Divyadarshini to join in Sundar.C movie

இது பற்றி ட்விட்டரில் பதிவிட்ட அவர், ஊட்டி, குடும்ப படம், சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் நடிக்கிறார்கள், குழப்பம், காமெடியாக உள்ளது. இதெல்லாம் சொன்னாலே உங்களுக்கே தெரியும் மாஸ்டர் யாராக இருப்பார் என. ஆமாம், சுந்தர்.சி.,யின் படத்தில் இணைவதில் மகிழ்ச்சி. ஹேண்ட்சம் ஹீரோக்களான ஜீவா மற்றும் ஜெய் உடன் நடிக்கிறேன் என சுந்தர்.சி, ஜீவா, ஜெய்யுடன் இணைந்து எடுத்துக் கொண்ட போட்டோவை டிடி வெளியிட்டுள்ளார்.

அதோடு, இந்த கலகலப்பான பொழுதுபோக்கு படத்தில் குஷ்பு சுந்தருக்காக காத்திருக்கிறோம். எப்போ மேடம் நீங்க இந்த படத்தில் இணைவீர்கள் என கேட்டுள்ளார். இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.

ஏற்கனவே சுந்தர்.சி இயக்கிய பிரபலமான காமெடி பிளாக்பஸ்டர் படமான உள்ளத்தை அள்ளித்தா படமும் ஊட்டியில் தான் படமாக்கப்பட்டது. இதனால் அதே பாணியில் மற்றொரு எவர்க்ரீன் காமெடி படத்தை இயக்கும் முயற்சியில் சுந்தர்.சி இறங்கி உள்ளாராம். அதனால் தான் இந்த முறையும் ஷுட்டிங்கிற்காக அவர் ஊட்டியையே தேர்வு செய்துள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X