Don't Miss!
- News
பாஜகனா அட்வைஸ் தரலாமா? சிடி ரவிக்கு எச்சரிக்கை விடுத்த அதிமுக நிர்வாகி.. ட்விட்டரில் கிளம்பிய மோதல்
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Lifestyle
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பிக் பாஸ் சீசன் 6ல் விஜய் டிவி பிரபலங்கள்?.. கசிந்தது போட்டியாளர்கள் பற்றிய தகவல்!
சென்னை : பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விஜய் டிவி பிரபலங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழில் கடந்த 2017ம் ஆண்டு ஆண்டு இந்நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு, இதுவரை ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளது. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனை தொடங்கும் பணி ஆயத்தமாகி வருகின்றன.
ஆறாவது சீசன் தொடங்கப்போகிறது என்ற தகவல் வெளியானதுமேக, சமூக ஊடகங்களிலும் பல போட்டியாளர்களின் பெயர்கள் வெளியாகி வருகின்றன.
Bimbisara
Twitter
Review:
டோலிவுட்டுக்கு
இன்னொரு
பாகுபலியாக
மாறுமா
இந்த
பிம்பிசாரா?

பிக் பாஸ்
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுள் ஒன்று தான் பிக் பாஸ், இந்த நிகழ்ச்சி தொடங்கினாலே அடுத்த நூறு நாட்களுக்கு அனைவருக்கும் சுவாரசியத்திற்கு பஞ்சமே இருக்காது. சண்டை,அழகை, காதல், ரொமான்ஸ், நட்பு, பாசம், கேலி, ஆட்டம் பாட்டம் என பல உணர்வுகளை இந்த நிகழ்ச்சியில் நாம் பார்க்க முடியும். பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி சிலர் குறை கூறி வந்தாலும், அதனை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டுதான் இருக்கின்றது.

ரக்ஷன்
கடந்த ஜனவரி மாதம் பிக் பாஸ் சீசன் 5 முடிவடைந்த நிலையில், தற்போது பிக் பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதில் பிரபல தொகுப்பாளரான ரக்ஷனுடன் தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. கடந்த சீசனில் ரக்ஷன் கலந்து கொள்ள இருந்ததாகவும், ஆனால், கடைசி நேரத்தில் அத்திட்டம் கைவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, இந்த முறை, குக் வித் கோமாளி சீசனும் முடிந்துவிட்டதால், ரக்ஷன் ஒரு போட்டியாளராக பிபி வீட்டிற்குள் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜலட்சுமி
மேலும், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ராஜலட்சுமி பிக் பாஸ் தமிழ் 5 இல் நுழைவார் என்று எதிர்பார்க்கலாம். நாட்டுப்புற பாடகியான ராஜலட்சுமி, தனது கணவர் மற்றும் பாடகர் செந்திலுடன் இணைந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நுழைந்தார். ஒவ்வொரு சீசனிலும் ஒரு பாடகர் அல்லது பாடகியை போட்டியாளராக பிபி வீட்டிற்குள் நுழைவதால், ராஜலட்சுமியின் பெயர் தற்போது அடிபட்டு வருகிறது.

அக்டோபரில்
விஜய் டிவியின் ஆஸ்தானா தொகுப்பாளரான டிடி என்கிற திவ்யதர்ஷினி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நுழைய உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த முறை பிரியங்கா தேஷ்பாண்டே வந்தது போல அந்த முறை டிடி உள்ளே நுழைய உள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த மூன்று முகமும் விஜய் டிவியின் பிரபலமான முகம் என்பதால் இவர்கள் நிச்சயம் கலந்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் இரண்டாம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.