»   »  என்னை அறிந்தால்... பாஸிடிவ் கருத்துகளால் பரவசமடைந்த அஜீத் ரசிகர்கள்!

என்னை அறிந்தால்... பாஸிடிவ் கருத்துகளால் பரவசமடைந்த அஜீத் ரசிகர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அஜீத்தின் என்னை அறிந்தால் படத்தின் முதல் காட்சி இன்று அதிகாலையிலேயே பல இடங்களிலும் திரையிடப்பட்டுவிட்டது.

படம் பார்த்தவர்கள் பெருமளவில் படம் குறித்து நேர்மறையான கருத்துக்களைக் கூறி வருகின்றனர். குறிப்பாக சமூக வலைத் தளங்களில் இந்தப் படத்துக்குக் கிடைத்துள்ள சாதகமான விமர்சனங்கள் அஜீத் ரசிகர்களைப் பரவசமடைய வைத்துள்ளது.


Positive reports for Ajith's Yennai Arinthaal

ஏ எம் ரத்னம் தயாரிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில், அஜீத் - அனுஷ்கா - த்ரிஷா - விவேக் நடித்துள்ள என்னை அறிந்தால் 1600 திரையரங்குகளில் உலகெங்கும் வெளியாகியுள்ளது.


துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் மிகப்பெரிய கொண்டாட்டத்துடன் இந்தப் படம் வெளியானது. மேள தாளம் முழங்க, அதிரடியாக முதல் காட்சி தொடங்கியது துபாயில்.


தமிழகத்தில் பல இடங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை மற்றும் வார நாளான வியாழக் கிழமை காட்டி படத்தின் அதிகாலைக் காட்சிகளை ரத்து செய்துவிட்டனர்.


சென்னையில் காசி, ஜோதி, உள்ளகரம் குமரன் போன்ற அரங்குகளில் மட்டும் காலை 5 மணிக்கு சிறப்புக் காட்சி நடத்தப்பட்டது.


இங்கெல்லாம் படம் பார்த்த ரசிகர்கள், அஜீத்தின் படங்களிலேயே இதுதான் பெஸ்ட் என்று கூறி கொண்டாடினர்.


ஆனால் சில விமர்சனங்கள் படத்தின் இரண்டாம் பாகத்தை குறை கூறியுள்ளனர்.

English summary
Ajith's Yennai Arinthaal movie is getting positive reports worldwide.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil