»   »  சமுத்திரக்கனியின் 'அப்பா'.... திரைப் பிரபலங்கள் நெகிழ்ச்சி!

சமுத்திரக்கனியின் 'அப்பா'.... திரைப் பிரபலங்கள் நெகிழ்ச்சி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ்த் திரையுலகினர் இப்போது அதிகமாக 'பேசும்' படமாக மாறியிருக்கிறது சமுத்திரக்கனி இயக்கத்தில் வெள்ளிக்கிழமை வரவிருக்கும் அப்பா படம்.

அப்பா படத்தில் சமுத்திரக்கனி, தம்பி ராமையா, நமோ நாராயணன் நடித்துள்ளனர்.


Positive talk on Samuthirakani's Appa

காதல், டூயட், மட்டமான காமெடி என தமிழ் சினிமாவின் வழக்கமான அம்சங்கள் ஏதுமில்லாத படம் இது. பிள்ளைகளை வளர்ப்பது, அவர்களுக்கு எப்படிப்பட்ட கல்விச் சூழலை உருவாக்கித் தருவது போன்றவற்றைப் பேசும் படம் இது.


ஒவ்வொரு பெற்றோரும் பார்க்க வேண்டிய படம் என்று நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி உள்பட நடிகர்களும் இயக்குநர்களும் பாராட்டி வருகின்றனர்.


இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ள இளையராஜா, இந்தப் படத்தைப் பார்த்ததும் தனது அப்பாவின் நினைவுகள் வந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.


நடிகர் சூரி, இயக்குநர் வெங்கட் பிரபு, ஐஏஎஸ் அதிகாரி சகாயம், இயக்குநர்கள் சேரன், கவுதம் மேனன், ஏஆர் முருகதாஸ், கேஎஸ் ரவிக்குமார், மலையாள நடிகர் மோகன் லால், ஜெயம் ரவி போன்றவர்கள் தங்கள் அப்பாக்கள் பற்றி வீடியோ பதிவாகப் பேசி, இந்தப் படத்தின் புரமோஷனுக்கு உதவியுள்ளனர்.


இந்தப் படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்த திரைப் பிரபலங்கள் பலரும் நெகிழ்ந்துபோய், "இது படமல்ல. உண்மையான பாடம். ஒவ்வொருவரும் தங்கள் பிள்ளைகளோடு பார்க்க வேண்டிய படம்," என்று பாராட்டி வருகின்றனர்.


நாளை மறுநாள் உலகெங்கும் வெளியாகிறது சமுத்திரக் கனியின் அப்பா!


அப்பா படங்கள்


English summary
There is a positive talk about Samuthirakkani's Appa movie, slated to release on coming Friday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil