»   »  பவர் பாண்டி கெட் டுகெதர்...சவுந்தர்யா ரஜினிகாந்த் கார் மோதி ஆட்டோ டிரைவர் காயம்

பவர் பாண்டி கெட் டுகெதர்...சவுந்தர்யா ரஜினிகாந்த் கார் மோதி ஆட்டோ டிரைவர் காயம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா ஓட்டிச் சென்ற கார் நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது மோதியது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா கணவரை பிரிந்து தனியாக வாழ்கிறார். அவர் தற்போது தனது அக்காவின் கணவர் தனுஷை வைத்து விஐபி 2 படத்தை இயக்கி வருகிறார்.

படப்பிடிப்பில் பசியாக இருக்கும் அவர் நேரம் கிடைக்கும்போது தனது குட்டி மகன் வேத் கிருஷ்ணாவை வெளியே அழைத்துச் செல்கிறார்.

பவர் பாண்டி

பவர் பாண்டி

தனுஷ் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள பவர் பாண்டி படத்தின் படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்தது. அதன் பிறகு விஐபி2 குழு, பவர் பாண்டி குழுவின் கெட் டுகெதர் நடந்தது.

சவுந்தர்யா

பவர்பாண்டி மற்றும் விஐபி2 ஆகிய படக்குழுவினரின் கெட் டுகெதரில் சவுந்தர்யா கலந்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவர் ட்விட்டரில் வெளியிட்டார்.

விபத்து

விபத்து

கெட் டுகெதர் புகைப்படத்தை வெளியிட்ட பிறகு சவுந்தர்யாவின் கார் நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது மோதியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆட்டோ

ஆட்டோ

சவுந்தர்யா ஓட்டிச் சென்ற கார் ஆழ்வார்பேட்டையில் நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவில் தூங்கிக் கொண்டிருந்த டிரைவர் மணி காயம் அடைந்தார்.

தனுஷ்

தனுஷ்

நடிகர் தனுஷ் ஆட்டோ டிரைவர் மணியை சமாதானம் செய்தார். இதனால் காயம் அடைந்தும் மணி இந்த விபத்து குறித்து போலீசில் புகார் அளிக்கவில்லை.

English summary
Soundarya Rajinikath attended the get together after Dhanush wrapped up his directorial debut Power Paandi's shooting. After that Soundarya's car hit an auto in which the driver is injured.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil