சிம்புவின் பத்து தல படத்துல இருந்து Power Packed அப்டேட்: ஷூட்டிங்கும் சீக்கிரமே முடியப் போகுதாம்!
சென்னை: மாநாடு படம் கொடுத்த வெற்றியைத் தொடர்ந்து சிம்பு அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
கெளதம் வாசுதேவ் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள 'வெந்து தணிந்தது காடு' படம் அடுத்த மாதம் வெளியாகிறது.
இந்நிலையில், சிம்புவின் 'பத்து தல' படத்தில் இருந்து ஒரு பவர் பேக்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

மாநாடு கொடுத்த சிறப்பான கம்பேக்
தமிழ்த் திரையுலகில் திறமையான நடிகரான சிம்பு, படப்பிடிப்புகளுக்கு சரியாக வருவதில்லை என அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். ஆனால் அதையெல்லாம் பொய்யாக்கும் விதமாக வெங்கட் பிரபுவுடன் இணைந்து 'மாநாடு' படத்தில் மாஸ் ஹிட் கொடுத்தார். டைம் லூப்பில் சிக்கிக் கொண்டு தவித்த சிம்பு, வசூலில் வேற லெவலில் சம்பவம் செய்தார்.

மீண்டும் பயங்கர பிஸியான ஆத்மன்
சிம்பு ஆத்மனாக மாறிய பிறகுதான் 'மாநாடு' படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்ததாக சொல்லப்படுகிறது. இப்போது அதையும் பிரேக் செய்யும் வேகத்தில், 'வெந்து தணிந்தது காடு', 'பத்து தல' படங்களில் நடித்து வருகிறார். இதில், கெளதம் இயக்கியுள்ள 'வெந்து தணிந்தது காடு' படத்தின் ஷூட்டிங் முடிந்து, அடுத்த மாதம் ரிலீஸாகிறது. சிம்பு, கெளதம், ஏ.ஆர். ரஹ்மான் காம்போ 3வது முறையாக இணைந்துள்ள இப்படத்திற்கு ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

கேங்ஸ்டராக சிம்பு
இதனைத் தொடர்ந்து சிம்பு நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் 'பத்து தல.' கன்னடத்தில் வெற்றிப் பெற்ற மஃப்டி படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இப்படத்தை, 'சில்லுன்னு ஒரு காதல்' கிருஷ்ணா இயக்கி வருகிறார். சிம்பு,வுடன் கெளதம் கார்த்திக், கலையரசன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்து வருகின்றனர். முக்கியமாக 'பத்து தல' படத்தில் ஏ.ஜி.ஆர் என்ற கேங்ஸ்டராக சிம்பு நடித்து வருவதால், அவரது ரசிகர்கள் மரண வெயிட்டிங்கில் உள்ளனர்.

மீண்டும் சூட்டிங் சென்ற சிம்பு
'பத்து தல' படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருவது, பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக சென்றுகொண்டிருந்த நிலையில், தனது தந்தை டி.ஆர். ராஜேந்திரனின் சிகிச்சைக்காக, அவருடன் அமெரிக்கா சென்றிருந்தார் சிம்பு. மீண்டும் சென்னை திரும்பிய சிம்பு, 'பத்து தல' படத்தில் நடித்து வருகிறார்.
Recommended Video

முக்கியமான ஷூட்டிங் ஓவர்
கெளதம் கார்த்திக்குடன் சிம்பு மோதவிருந்த பவர் பேக்ட் ஆக்சன் காட்சிகள், பெல்லாரியில் நடந்து முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த காட்சிக்காக தான் கெளதம் கார்த்திக்கும் காத்திருந்ததாகவும், இப்போது அவர் தனது அடுத்த படங்களில் நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனிடையே, 'பத்து தல' படத்தின் எஞ்சிய காட்சிகளையும், ஆகஸ்ட் மாதத்திற்கும் முடிக்க படக்கு திட்டமிட்டுள்ளதாம். இதனால், சிம்பு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











