»   »  2 படம்.. ஒரு நாள் கேப்.. அடுத்தடுத்து ரிலீஸ்.. கலகல புன்னகையுடன் "பவர் ஸ்டார்"!

2 படம்.. ஒரு நாள் கேப்.. அடுத்தடுத்து ரிலீஸ்.. கலகல புன்னகையுடன் "பவர் ஸ்டார்"!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'கககபோ', 'அட்ரா மச்சான் விசிலு' என பவர் ஸ்டார் சீனிவாசன் 2 காமெடிப் படங்களுடன் இந்த வாரம் களமிறங்குகிறார்.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாளை 'அட்ரா மச்சான் விசிலு', 'அட்டி', 'தில்லுக்குத் துட்டு' என 3 காமெடிப் படங்கள் வெளியாகின்றன. இந்த 3 படங்கள் தவிர 'ககபோ' என்ற படமும் நாளை மறுநாள் வெளியாகிறது.

வழக்கமாக ரம்ஜான் போன்ற பண்டிகை தினங்களில் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும். ஆனால் 'கபாலி' ரம்ஜானுக்கு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்ததால் பல படங்கள் தள்ளிப்போய்விட்டன.

Power Star 2 Movies Release this Ramzan

இதனால் சிறு பட்ஜெட்+ காமெடி கலவையில் இந்த வார படங்கள் ரிலீசாகின்றன. இதில் 'அட்ரா மச்சான் விசிலு' படத்திற்கு இலவச டிக்கெட் கொடுப்பதாக படக்குழு புரமோஷன் செய்து வருகிறது.

பவர் ஸ்டார் - சிவா கூட்டணியில் உருவாகியிருக்கும் இப்படத்தில் ரசிகனாக சிவாவும், நடிகராக பவர் ஸ்டாரும் நடித்துள்ளனர். இதனால் 'தமிழ்படம்' போல இப்படமும் ரசிகர்களுக்கு நல்ல விருந்தளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபக்கம் பவர் ஸ்டார், எம்.எஸ்.பாஸ்கர், தேவ தர்ஷினி, சுப்பு பஞ்சு, மயில்சாமி என எக்கச்சக காமெடி நடிகர்களுடன் உருவாகியிருக்கும் 'கககபோ' திரைப்படம் நாளை மறுநாள் வெளியாகிறது.

2 படங்களிலும் பவர் ஸ்டாரை முன்வைத்தே விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றனர். ஒருநாள் இடைவெளியில் 2 படங்கள் வெளியாவதும், தன்னை வைத்தே படக்குழு விளம்பரப்படுத்தி வருவதும் பவர் ஸ்டாரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறதாம்.

பவர் ஸ்டார் நடிப்பைப் பார்த்து ரசிகர்களும் மகிழ்ச்சி அடைவார்களா? காத்திருந்து பார்க்கலாம்.

English summary
Power Star Srinivasan's Adra Machan Visilu and Kakapo both Movies Release this Week.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil