twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சுமாரான படங்கள் ஜெயிக்க பவர் ஸ்டாரே போதும் - இது கேயார் பேச்சு

    By Shankar
    |

    Power star Srinivasan
    சென்னை: சுமாரான படங்கள் ஜெயிக்க சூப்பர் ஸ்டார் தேவையில்லை... பவர் ஸ்டாரே போதும் என்றார் இயக்குநர் கேயார்.

    நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தின் 50-வது நாள் வெற்றிவிழா சென்னை ராணி சீதை அரங்கில் நடந்தது. இந்த விழாவில் படத்தில் பணியாற்றியவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் பார்த்திபன், கேயார், விமல், தயாரிப்பாளர்கள் சிவா, சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த விழாவில் சிறப்புரையாற்றி பேசிய பார்த்திபன், ஒரு சுமாரான படம் சூப்பர் ஹிட் படமாகணும்னா சூப்பர் ஸ்டார் வேணும் என்று பேசிவிட்டு அமர்ந்தார்.

    அடுத்து பேசிய கேயார், "பார்த்திபன் சொன்னபடி, சுமாரான படங்களுக்கு சூப்பர் ஸ்டார் தேவையில்லை. இனி வரும் காலங்களில் சின்ன படங்கள் சூப்பர் ஹிட் படமாகணும்னா சூப்பர் ஸ்டார் தேவையில்லை. பவர் ஸ்டாரே போதும். இதற்கு காரணம் இப்பொழுதெல்லாம் படம் நன்றாக இருந்தால் மட்டும்தான் தியேட்டர்களில் ஓடுகின்றன. யார் நடித்திருந்தாலும் படம் நன்றாக இல்லை என்றால் ஓடாது.

    நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் தலைப்பு, 'என்னது சிவாஜி செத்துட்டாரா?' என்ற டீசர் ஆகியவற்றைப் பார்த்தபோதே இதில் ஏதோ புதுசா முயற்சி பண்ணியிருக்காங்கன்னு தோணுச்சி. அது இப்ப நிரூபணமாகிடுச்சு," என்றார்.

    English summary
    Director Keyar says that a Power star is enough for the success of a medium budget movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X