»   »  பீப் பாடல் ஒட்டுமொத்த பெண் இனத்தையே கேவலப்படுத்தி விட்டது: ''பவர்ஸ்டார்''

பீப் பாடல் ஒட்டுமொத்த பெண் இனத்தையே கேவலப்படுத்தி விட்டது: ''பவர்ஸ்டார்''

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: "பீப் பாடல் கண்டனத்திற்குரிய ஒன்று. யார் பாடியிருந்தாலும் இதனை வன்மையாகக் கண்டிக்க வேண்டும்" என்று பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

சிம்பு, அனிருத் கூட்டணியில் வெளியான பீப் பாடல் சர்ச்சை தமிழ்நாட்டில் இன்னும் முடியவில்லை. நேற்று இது குறித்து பேட்டி அளித்த நடிகர் சிம்பு அனிருத்திற்கும் இந்தப் பாடலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

இந்தப் பாடலுக்கான முழுப்பொறுப்பையும் நானே ஏற்கிறேன் என்று கூறியிருந்தார். இந்தப் பாடலுக்கு நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்த நிலையில், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனும் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

Power Star Srinivasan says About Beep Song

"பீப் பாடல் கண்டனத்திற்குரிய ஒன்று. இந்தப் பாடல் பெண் இனத்தையே கேவலப்படுத்தி இருக்கிறது.பாடலை யார் பாடியது, யார் எழுதியது என்று எனக்குத் தெரியவில்லை.

ஆனால் யார் பாடியிருந்தாலும் இதனை வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.தமிழ்நாட்டில் தமிழனே இப்படிப் பாடினால் அது மிகவும் தவறு. இந்தப் பாடல் விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும்".

இவ்வாறு பவர் ஸ்டார் ஸ்ரீநிவாசன் கூறியிருக்கிறார். இவர் நடித்திருந்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடித்துக் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Beep Song Controversy: "Beep Song is Denigrates Women's Race" Power Star Srinivasan says in Recent Interview.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil