»   »  என் பின்னால் கமலோ, டிடிவியோ, திமுகவோ இல்லை: விஷால்

என் பின்னால் கமலோ, டிடிவியோ, திமுகவோ இல்லை: விஷால்

Posted By:
Subscribe to Oneindia Tamil
விஷாலை பார்த்து அதிமுக அதிகமாக பதற்றப்படுவது ஏன்?- வீடியோ

சென்னை: தன்னை பார்த்து ஏன் பயப்படுகிறார்கள் என்று நடிகர் விஷால் நினைக்கிறார்.

ஆர்.கே. நகரில் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார் நடிகர் விஷால். அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டு, ஏற்கப்பட்டு பின்னர் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து விஷால் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

வேட்புமனு

வேட்புமனு

வேட்புமனு தாக்கல் நிராகரிக்கப்பட்ட விஷயத்தில் நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். ஜனநாயகம் எங்கே போனது. படத்தை விட நிஜத்தில் பல திருப்பங்கள் ஏற்படுகிறது.

கமல்

கமல்

நான் கட்சி துவங்குவது குறித்து மக்கள் தீர்மானிக்கட்டும். என் பின்னால் கமல் ஹாஸனோ, டிடிவி தினகரனோ, திமுகவோ இல்லை. தெலுங்கு பேசும் மக்களின் வாக்குகளை பெற நினைத்து தேர்தலில் போட்டியிடவில்லை. ஒரு இந்தியன் என்ற முறையிலேயே போட்டியிட வந்தேன்.

செல்போன்

செல்போன்

அலுவலகத்தில் பேசிக் கொண்டிருந்த போது தேர்தல் அதிகாரி அடிக்கடி வெளியே சென்று செல்போனில் பேசிவிட்டு வந்தார். தேர்தல் அலுவலரை மாற்றுவதால் செய்த தவறு சரியாகிவிடுமா? ஒரு சுயேட்சை வேட்பாளரை பார்த்து ஏன்....என்று கேட்டார் விஷால்.

விஷால்

விஷால்

இதை எல்லாம் நான் எதிர்பார்க்கவே இல்லை. விஷால் என்கிற ஒரு சுயேட்சை வேட்பாளரை பார்த்து ஏன் பயப்பட வேண்டும். எனக்கு புரியவில்லை. கடந்த தேர்தலில் பணப்பட்டுவாடா நடந்தது என்று தேர்தலை நிறுத்தினார்கள். தற்போது ஆளை மிரட்டுகிறார்கள், தூக்குகிறார்கள் என்று நேற்று இரவு விஷால் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Vishal thinks that powerful people are scared of him. He made it clear that Kamal Haasan, TTV Dinakaran and DMK are not behind him. It is noted that Vishal's nomination got rejected again.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil