»   »  ரசிக மகா ஜனங்களுக்கு ஒரு எச்சரிக்கை... பவர்ஸ்டார் "லத்திகா-2"வை எடுக்கப் போறாராம்...!

ரசிக மகா ஜனங்களுக்கு ஒரு எச்சரிக்கை... பவர்ஸ்டார் "லத்திகா-2"வை எடுக்கப் போறாராம்...!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது அறிமுகப் படமான லத்திகா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் திட்டத்தில் இருக்கிறாராம் பவர்ஸ்டார் சீனிவாசன்.

பேரைக் கேட்டாலே சும்மா அதிருதுல்லா என்பது பவர்ஸ்டாருக்கும் பொருந்தும். அந்தளவிற்கு பவர்ஸ்டாரின் "நடிப்புத் திறமை" சொல்லி மாளாது. தனது வாயை அஷ்டகோணலாக்கி அவர் சிரிக்கும் சிரிப்பிற்கே ரசிகப் பட்டாளம் தனியாக உள்ளது.

மருத்துவராகத் தன் வாழ்க்கையைத் துவங்கிய பவர்ஸ்டார் சீனிவாசன், லத்திகா படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். அடுத்தடுத்து ஹீரோ வேடம் கை கொடுக்காததால் காமெடி நடிகரானார் பவர்ஸ்டார்.

நானும் ஹீரோ தான்...

நானும் ஹீரோ தான்...

இவர் தற்போது ‘வாலிப ராஜா', ‘நாரதன்', நானும் ஹீரோதான்', ‘சவுகார்பேட்டை' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். விரைவில் இப்படங்கள் வெளியாக இருக்கின்றன.

லத்திகா...

லத்திகா...

இந்நிலையில் தமிழ் சினிமாவைப் பிடித்தாட்டும் இரண்டாம் பாகம் மோகம் இவரையும் விடவில்லை. அதன்படி தனது வெற்றிப்படமான (?) லத்திகாவின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டிருக்கிறாராம் பவர்ஸ்டார்.

மாபெரும் வெற்றி...

மாபெரும் வெற்றி...

இது குறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ‘என்னுடைய ‘லத்திகா' படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதற்கு மக்கள் பெருமளவில் ஆதரவு கொடுத்தார்கள்.

பார்ட்-2...

பார்ட்-2...

அவர்களின் மகிழ்ச்சிக்காகவும் ரசிகர்களின் வேண்டுகோளுக்காகவும் ‘லத்திகா 2' படத்தை எடுக்க இருக்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

ஆதலால் ரசிகப் பெருமக்களே, உங்களுக்கெல்லாம் ஒரு பிரியாணி பொட்டலம் பார்சல்... !

English summary
Actor Powerstar Srinivasan is planing to take his depute film lathika's second part.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil