»   »  எம்.ஜி.ஆர் இருந்திருந்தால்... "இச்" கொடுத்திருக்கமாட்டார், உதை தான் கொடுத்திருப்பார்: பவர்ஸ்டார்

எம்.ஜி.ஆர் இருந்திருந்தால்... "இச்" கொடுத்திருக்கமாட்டார், உதை தான் கொடுத்திருப்பார்: பவர்ஸ்டார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எம்.ஜி.ஆர். மட்டும் தற்போது உயிரோடு இருந்திருந்தால், தன் பட போஸ்டரைப் பார்த்து உதை தான் கொடுத்திருப்பார் எனத் தெரிவித்துள்ளார் பவர்ஸ்டார் சீனிவாசன்.

மருத்துவராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய பவர்ஸ்டார் சீனிவாசன், அதிகமான படங்களில் நடித்திடாத போதும், தொடர்ந்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார்.


அந்தவகையில், சமீபத்தில் வெளியான அவரது ‘அட்ரா மச்சான் விசிலு' பட போஸ்டர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. காரணம் அதில், எம்.ஜி.ஆர். பவர்ஸ்டாரின் கன்னத்தில் முத்தம் கொடுப்பது போலவும், அண்ணா அருகில் உட்கார்ந்திருப்பது போலவும் போஸ்டர் வடிவமைக்கப்பட்டிருந்தது.


பார்த்தவுடன் அது போட்டோஷாப் படம் தான் என்பது பளிச்சென தெரிந்தாலும், பவர்ஸ்டாரின் "அட்ராசிட்டி-பப்ளிசிட்டி" ரசிக்கும்படியாகவே இருந்தது.


எம்.ஜி.ஆர். ரசிகன்...

எம்.ஜி.ஆர். ரசிகன்...

இந்நிலையில், தனது இந்த போஸ்டர்கள் குறித்து பவர்ஸ்டார் கூறுகையில், ‘நான் சிறுவயதில் இருந்தே எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். எனவே, அவர் எனக்கு முத்தம் கொடுப்பது போன்று வெளியான புகைப்படங்கள் எனக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது' என்றார்.


அடி தான் கிடைத்திருக்கும்...

அடி தான் கிடைத்திருக்கும்...

அதோடு, ‘அதோடு, இந்தப் போஸ்டரை தமிழ்நாட்டு மக்கள் சகித்துக் கொண்டார்கள். ஆனால், இப்போது எம்.ஜி.ஆர். மட்டும் உயிரோடு இருந்திருந்தால் என்னை அழைத்து அடி பின்னி எடுத்திருப்பார்' என அவருக்கே உரிய டிரேட்மார்க் சிரிப்புடன் கூறுகிறார் பவர்ஸ்டார்.


மிர்ச்சி சிவா...

மிர்ச்சி சிவா...

போஸ்டர்களிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த அட்ரா மச்சான் விசிலு படத்தை திரைவண்ணன் இயக்கியுள்ளார். மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், பவர்ஸ்டாருடன் சிங்கமுத்து, சென்ராயன், நைனா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.


இசை...

இசை...

ரகுநந்தன் இசையமைத்துள்ள இப்படத்தில் ஒரு பாடலை ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார். இப்பாடல்களை ஈராஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இம்மாதம் 24-ந் தேதி இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நடைபெறவுள்ளது.


English summary
Adra Machan Visilu is a 2016 Indian Tamil comedy film directed by Thiraivannan, starring Shiva and Naina Sarwar in the lead roles.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil