»   »  பவரிடம் பிடித்ததே இந்த காமெடி தான் போங்க!

பவரிடம் பிடித்ததே இந்த காமெடி தான் போங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பவர்ஸ்டார் சீனிவாசன் ட்விட்டரில் அவ்வப்போது காமெடியாக ட்வீட்கள் போட்டு வருகிறார்.

நான் தான் பவர்ஸ்டார் என்று சீனிவாசன் மைக் செட் வைக்காத குறையாக கூறி வந்தபோது அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் அவர் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் தான் அவருக்கு பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்தது. அந்த படம் ரிலீஸான பிறகு பவர் கண்டமேனிக்கு பிரபலம் ஆகிவிட்டார்.

பிரபலம் ஆன கையோடு மோசடி வழக்கில் சிக்கி திஹார் சிறை வரை சென்றுள்ளார். பவர்ஸ்டார் ட்விட்டரில் அவ்வப்போது கருத்து தெரிவிக்கிறேன் என்ற பெயரில் சிலரை கடுப்பேற்றுவதும், காமெடி செய்வதுமாக உள்ளார். அதில் சில ட்வீட்கள் இதோ,

rn

அஜீத்

பவர்ஸ்டார் ட்விட்டரில் தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டு கூறியிருப்பதாவது, நான் பார்ப்பதற்கு விஜய் போன்று இருந்தால் ரீட்வீட் செய்யுங்கள், அஜீத் போன்று இருந்தால் பேவரைட் செய்யுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

rn

ரஜினி

அடுத்த சூப்பர் ஸ்டார் அஜீத்தோ விஜய்யோ. ஆனால் எனக்கு போட்டியா நான் பார்க்கிறது தி ரியல் சூப்பர் ஸ்டார் ரஜினி சார் மட்டும் தான் என்று பவர் ட்வீட் செய்துள்ளார். ஏற்கனவே ரஜினி ரசிகர்கள் பவர் மீது கொலவெறியில் இருக்கிறார்கள். இதில் இது வேறயா பவரு?

rn

தல

சூப்பர் ஸ்டார் என்ற வார்த்தையைவிட சக்திவாய்ந்த வார்த்தை தல#HappyBirthdayThalaAjith என்று பவர் அஜீத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தல, தலைவர் ரசிகர்கள் ஒற்றுமையாக இருப்பது பிடிக்கலையா உங்களுக்கு?

rn

பிளஸ் 2

4 ஆண்டுகளுக்கு முன்னாடி நானும் இப்படித்தான் பயந்துட்டு இருந்தேன் பிளஸ் டூ ரிசல்ட்டுக்காக. அனைத்து பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கும் வாழ்த்துக்கள் என்று ட்வீட் செய்துள்ளார் பவர். ஏன் பவரு, 4 வருஷத்துக்கு முன்பு தான் பிளஸ் 2 படிச்சீங்களாக்கும், நம்பிட்டோம்.(ரசிகர்களின் மைண்ட் வாய்ஸ்)

rn

தல இவர்

ஆ, ஊன்னா அந்த சூப்பர் ஸ்டாருக்கு போட்டின்னா அது இந்த பவர்ஸ்டார் என்று கூறும் அவரின் புதிய சேட்டை இது தான்.தலைவர் - சூப்பர்ஸ்டார்

தல - அஜீத்

தல- இவர் - பவர்ஸ்டார்

ஷப்பா இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலைடா(இது வாசகர்களின் மைண்ட் வாய்ஸ்)

English summary
Powerstar Srinivasan who is known for his comic sense in the screen is funny in twitter too.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil