»   »  படமாக்கப்படும் லிங்கா பிரச்சினை- ரஜினியாக நடிக்கும் பவர் ஸ்டார்

படமாக்கப்படும் லிங்கா பிரச்சினை- ரஜினியாக நடிக்கும் பவர் ஸ்டார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்தின் லிங்கா படம் அதன் விநியோகஸ்தர்களுக்கு லாபமாக அமையவில்லை என்று அனைத்து விநியோகஸ்தர்களும் இணைந்து போராட்டம் நடத்தி, கணிசமான பணத்தையும் நஷ்டஈடாகப் பெற்றது நினைவிருக்கலாம்.

தற்போது அந்தப் பிரச்சினையை வைத்து தமிழ் சினிமாவில் ஒரு முழுநீள ஸ்பூஃப் படமாக எடுக்கப் போகிறார்களாம், இதில் ரஜினியாக நடிக்கவிருப்பது பவர் ஸ்டார் சீனிவாசன். தமிழ்த் திரையுலகில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய லிங்கா பிரச்சினை படமாவது ஒருபக்கம் எதிர்ப்பையும், மறுபக்கம் எதிர்பார்ப்பையும் சம்பாதித்து வருகிறது.

லிங்கா படம், வெளியீடு மற்றும் தொடர்ந்து நடந்த பிரச்சினைகள் போன்றவற்றை ஒன்று விடாமல் சொல்லி இந்தப் படத்தை, எடுத்து வெளியிட இருப்பது லிங்கா விநியோகஸ்தர் சிங்காரவேலன் தானாம்.

இந்தப் படத்தால் என்னென்ன பிரச்சினைகள் எழலாம் என்பதைப் பார்க்கலாம்.

பவர் ஸ்டார் சீனிவாசன்

பவர் ஸ்டார் சீனிவாசன்

லத்திகா என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகராக (உண்மையா பாஸ்) அறிமுகமானவர் சீனிவாசன். பவர் ஸ்டார் என்ற பட்டத்தைத் தானாகவே சூடிக் கொண்ட இவர், தொடர்ந்து காமெடியனாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

ஐ படத்தில்

ஐ படத்தில்

கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தில் முழு நீளக் காமெடியனாக வந்தாலும், ஷங்கரின் ஐ படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்ததன் மூலம் மக்களிடம் புகழ் பெற்றவர் பவர் ஸ்டார். அந்தப் படத்தில் எந்திரன் ரஜினி வேடத்தில் அவர் வந்தது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஹீரோவாக

மீண்டும் ஹீரோவாக

இப்பொது பவர் மீண்டும் ஹீரோவாக நடிக்கப் போகிறார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைக் கிண்டல் செய்வது மாதிரி அமைக்கப்பட்டுள்ள திரைக்கதையில் இவர் நடிக்கும் புதிய படத்தின் பெயர் நானும் ஹீரோதான்.

கதை என்ன

கதை என்ன

ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த லிங்கா திரைப்படம் விநியோகஸ்தர்களுக்கு லாபகரமாக அமையவில்லை, இதனால் ரஜினி தங்களுக்கான நஷ்ட ஈட்டைத் தர வேண்டும் என்று கூட்டம் கூட்டமாக விநியோகஸ்தர்கள் கொடிபிடித்தார்கள் அல்லவா. அதனை அப்படியே படமாக்கி வெளியிடத் திட்டமிட்டு இருக்கிறார், லிங்கா விநியோகஸ்தர் சிங்காரவேலன்.

இது ஒரு ஜாலியான படம் சொல்வது சிங்காரவேலன்

இது ஒரு ஜாலியான படம் சொல்வது சிங்காரவேலன்

இந்தப் படம் முழுக்க முழுக்க நகைச்சுவையை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஜாலியான படமாக இருக்கும், பவர்ஸ்டார் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க அந்தப் படம் நஷ்டமடைகிறது. பவர்ஸ்டார் அதனை எப்படி சரி செய்து பிரச்சினையில் இருந்து வெளிவருகிறார் என்பது தான் கதை.

ரஜினி பார்த்தால் சிரித்து விடுவார்

ரஜினி பார்த்தால் சிரித்து விடுவார்

படத்தை எடுத்து முடித்தவுடன் ரஜினிக்கும் போட்டுக் காட்ட உள்ளோம், ரஜினியே பார்த்தாலும் சிரித்துவிடும் படிதான் கதையை அமைத்து இருக்கிறோம். மேலும் இது ரஜினியை எந்த விதத்திலும் அவமதிப்பது போல இருக்காது என்று கூறுகிறார்..அது சரி

லிங்காவின் பாதிப்பு கண்டிப்பாக இருக்கும்

லிங்காவின் பாதிப்பு கண்டிப்பாக இருக்கும்

லிங்கா படத்தை வாங்கி நஷ்டப்பட்ட சிங்காரவேலன் அதனைப் படமாக்கும் போது சும்மாவா இருப்பார், அப்படியே ஜாலியாக எடுத்தாலும் நோக்கம் ரஜினியைக் கிண்டல் செய்வது போன்று தானே இருக்கிறது என்று திரையுலகினர் பலரும் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளனர்.

ரசிகர்கள் கேள்வி எழுப்ப மாட்டார்களா என்ன...

ரசிகர்கள் கேள்வி எழுப்ப மாட்டார்களா என்ன...

இந்தப் படத்தில் பவரை நடிக்க வைத்தது மட்டும் போதாது, ரசிகர்களிடம் படத்தைக் கொண்டு சேர்க்க ஒரு திறமையான இயக்குநர் வேண்டும் என்று தேடி வருகிறாராம் சிங்காரவேலன். எல்லாம் சரி ரஜினியாக பவர் ஸ்டார் நடிச்சா ரஜினியின் ரசிகர்கள் கேள்வி எழுப்ப மாட்டார்களா?

English summary
Linga Movie Distributor SIngaravelan Has planned to make a spoof film on the problems faced by 'Lingaa' before and after its release, 'Powerstar' Srinivasan Acting A Hero In This Movie. Movie Titled Naanum Herothan , Powerstar To Imitate Rajinikanth ? Wait and See!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil