»   »  "வாங்க வாங்க" சார்.. வந்து பவர் ஸ்டார் நடிக்கிறதைப் பாருங்க சார்!

"வாங்க வாங்க" சார்.. வந்து பவர் ஸ்டார் நடிக்கிறதைப் பாருங்க சார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இஸ்மாயில் இயக்கத்தில் பவர்ஸ்டார் நடித்து வரும் புதிய படத்தின் பெயர் வாங்க வாங்க.

முழுக்க முழுக்க நகைச்சுவையை அடிப்படையாகக் கொண்டு பேஸ்புக்கைக் கதைக்களமாகக் கொண்டு தயாராகியுள்ளதாம் இப்படம். மூன்று பாடல், இரண்டு பைட் என படம் படு கமர்ஷியலாக இருக்குமாம்.

இப்படத்தில் பவர்ஸ்டார் சீனிவாசன், அப்புக்குட்டி உள்ளிட்டோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வாங்க வாங்க...

வாங்க வாங்க...

ரசிகர்களைத் தியேட்டருக்கு வாங்க, வாங்க என அழைக்கும் விதத்தில் இப்படத்திற்கு அப்படிப் பெயர் வைக்கப் பட்டுள்ளதாம்.

சாப்ட் லைட்டிங்...

சாப்ட் லைட்டிங்...

படம் முழுவதும் சாப்ட் லைட்டிங்கில் படமாக்கப்பட்டுள்ளதாம். அதனால் காட்சிகள் கண்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப் படுகிறது.

ஷூட்டிங்...

ஷூட்டிங்...

இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல், பழனி, ஏற்காடு, கோவா உள்ளிட்ட இடங்களில் நடந்துள்ளது.

இவரும் விமல் தான்...

இவரும் விமல் தான்...

இப்படத்தின் நாயகன் பெயரும் விமல் தான். ஆனால் இவர் களவாணி, மஞ்சப்பை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Vanga Vanga is an upcoming Tamil film directed by Ismail starring Vimal, Powerstar Srinivasan and Sivabalan aka Appukutty.
Please Wait while comments are loading...