»   »  டீலா நோ டீலா?: சாஹோ ஹீரோயினிடம் கேட்ட பிரபாஸ்

டீலா நோ டீலா?: சாஹோ ஹீரோயினிடம் கேட்ட பிரபாஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: சாஹோ படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்கும் ஷ்ரத்தா கபூருடன் டீல் போட்டுள்ளார் பிரபாஸ்.

பாகுபலி 2 படத்தை அடுத்து பிரபாஸ் நடித்து வரும் படம் சாஹோ. இந்த படத்திற்காக அவர் தனது உடல் எடையை வெகுவாக குறைத்து புதிய கெட்டப்பில் உள்ளார்.

பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார்.

சாஹோ

சாஹோ

சாஹோ படம் தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாக உள்ளது. படப்பிடிப்பு நடந்து வருகிறது. விரைவில் ஷ்ரத்தா படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.

பிரபாஸ்

பிரபாஸ்

ஷ்ரத்தாவுக்கு தெலுங்கு கற்றுக் கொடுப்பதாகவும், பதிலுக்கு தனக்கு இந்தி கற்றுத் தருமாறும் பிரபாஸ் அவருடன் டீல் போட்டுள்ளாராம். ஷ்ரத்தாவும் ஓகே சொல்லியுள்ளாராம்.

இந்தி

இந்தி

ஷ்ரத்தா தெலுங்கு கற்றுக் கொண்டாலும் அவருக்கு வேறு யாரோ டப்பிங் பேச உள்ளார். பிரபாஸ் இந்தியில் தானே பேசி நடிக்க விரும்புகிறார். பாலிவுட் செல்லும் ஆசையில் உள்ளார் பிரபாஸ்.

கரண் ஜோஹார்

கரண் ஜோஹார்

பிரபாஸ் சரி என்று சொன்னால் போதும் அவரை உடனே பாலிவுட்டில் அறிமுகம் செய்து வைக்க பிரபல இந்தி இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹார் தயாராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திப்பு

சந்திப்பு

ஷ்ரத்தாவும், பிரபாஸும் இதுவரை சந்திக்கவில்லையாம். செல்போன் மூலம் மட்டுமே பேசிக் கொள்கிறார்களாம். இந்நிலையில் பாகுபலியை நேரில் பார்க்க ஆசையாக உள்ளேன் என்று ஷ்ரத்தா தெரிவித்துள்ளார்.

English summary
According to reports, Prabhas has cut a deal with his Saaho co-star Shraddha Kapoor.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil