»   »  பிரபாகரன் வாழ்க்கை வரலாறு... படமாக்கும் இன்னொரு புதிய முயற்சி!

பிரபாகரன் வாழ்க்கை வரலாறு... படமாக்கும் இன்னொரு புதிய முயற்சி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் புதிய முயற்சி இந்த மாதம் தொடங்குகிறது.

ஸ்டுடியோ 18 என்ற நிறுவனம் இந்த முயற்சியில் இறங்கியுள்ளது.

Prabhakaran Bio Pics shoot from this month

பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்குவதாகக் கூறி சில இயக்குநர்கள் ஏற்கெனவே களமிறங்கினர். வீரப்பன் கதையை படமாக்கிய ரமேஷும் இதற்கான வேலையில் இறங்கினார். அந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ் நடிப்பார் என்று சொல்லப்பட்டது. ஆனால் அறிவிப்புடன் நின்றுவிட்டது.

இந்த நிலையில் இப்போது புதிதாக ஸ்டுடியோ 18 அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தை வெங்கடேஷ் குமார் இயக்கவிருக்கிறார். நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரம் வெளியாகவில்லை.

ஸ்டுடியோ 18 நிறுவனம் ஏற்கெனவே உனக்குள் நான், லைட்மேன், நீலம் ஆகிய படங்களைத் தயாரித்துள்ளது. இந்த ஏப்ரல் முதல் படப்பிடிப்பு ஆரம்பம் என அறிவித்துள்ளனர்.

English summary
Studio 18 production company has announced a bio pic on Tamil Leader Velupillai Prabhakaran from April 2018

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X