»   »  பிரபாகரன் பற்றிய படம் - ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிரபாகரன் பற்றிய படம் - ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றுப் படம் தெலுங்கில் வெளியாக இருக்கிறது. சிறிய இடைவெளிக்குப் பிறகு நடிகர் மோகன்பாபுவின் மகன் மனோஜ் மஞ்சு நடிக்கும் திரைப்படம் 'ஒக்கடு மிகிலடு'.

இந்தப் படத்தின் கதை இலங்கை விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கைக் கதையாம். அதனால்தான் 'அன்டோல்டு ஸ்டோரி' என கேப்சன் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடந்தது. படத்தை அஜய் ஆண்ட்ரூஸ் இயக்கும் இப்படத்தை பத்மஜா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

 விடுதலைப் புலிகள்

விடுதலைப் புலிகள்

தென்னிந்தியாவைப் பொறுத்தவரை மிக சென்சிட்டிவ்வான அரசியல் போராட்டங்களில் ஒன்று இலங்கை உள்நாட்டுப் போர். அதை மையப்படுத்தி தமிழில் சில படங்கள் வெளிவந்திருந்தாலும் தெலுங்கில் அந்தமாதிரியான படங்கள் வெளிவந்தது இல்லை.

நவம்பர் 10 ரிலீஸ்

போராளிகளின் வலிகளையும், போராட்டத்தையும் உணரத் தயாராகுங்கள். ஒக்கடு மிகிலடு படம் வரும் நவம்பர் 10-ம் தேதி வெளிவர இருக்கிறது' என படத்தின் ஹீரோ மஞ்சு மனோஜ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

 புலிகள் இயக்கம்

புலிகள் இயக்கம்

இந்தப் படத்தின் போஸ்டரில் புலிகள் இயக்கத்தின் லோகோ சாயல் இருக்கிறது. பிரபாகரனின் ஆரம்ப கால வாழ்க்கையையும், புலிகள் இயக்கத்தைப் பற்றியும் எடுக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

 தமிழிலும் வெளியாகும்

தமிழிலும் வெளியாகும்

'ஒக்கடு மிகிலடு' தமிழில் 'நான் திரும்ப வருவேன்' எனும் பெயரில் வெளியாக இருக்கிறது. தமிழில் வசனம் மற்றும் பாடல்களை சுரேஷ் ஜித்தன் எழுதியிருக்கிறார். தமிழில் வெளியிடும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

 தமிழில் சர்ச்சை

தமிழில் சர்ச்சை

வழக்கமாக, காரசாரமான மசாலா படங்கள் வெளியாகும் தெலுங்கு சினிமாவில் இந்தப் படம் உணர்வு ரீதியாக எடுக்கப்பட்டிருக்குமா எனத் தெரியவில்லை. பிரபாகரனைத் தவறாக சித்தரிப்பதைப் போல இருந்தால் தமிழில் வெளிவருவதில் சிக்கல் ஏற்படலாம் என சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

English summary
Manoj Manju plays a major role in 'Okkadu migiladu movie based on Prabhakaran's life story. This film will be released on november 10.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X