வாரிசு, துணிவு படத்துடன் மோதும் பிரபாஸின் 'ஆதி புருஷ்' ஐமேக்ஸ்-3-D படம்..அயோத்தியில் டீசர் வெளியீடு

பாகுபலி பிரம்மாண்ட படத்தின் நாயகன் பிரபாஸ் நடித்து பிரம்மாண்டமாக 3-டி, ஐமேக்ஸ் தொழில் நுட்பத்தில் வெளியாகும் படம் 'ஆதி புருஷ்'

வரும் ஜனவரி 2023 பொங்கல் அன்று இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

தமிழின் உச்ச நடிகர்கள் அஜித், விஜய் ஆகியோரின் துணிவு, வாரிசு படங்களுக்கு இது கடும் போட்டியாக இருக்கும் என திரையுலகில் ஹாட் டாக் உள்ளது.

பிரபாஸின் ஆதி புருஷ் பட டீசர் வெளியீடு தேதி அறிவிப்பு

பிரபாஸின் ஆதி புருஷ் பட டீசர் வெளியீடு தேதி அறிவிப்பு

'பாகுபலி' படத்தின் மூலம் உலக அளவில் ரசிகர்களை சென்றடைந்தவர் நடிகர் பிரபாஸ். இவர் நாயகனாக நடித்திருக்கும் 'ஆதி புருஷ்' எனும் படம் பெருத்த எதிர்ப்பார்ப்புடன் தயாராகி வருகிறது. தமிழ், தெலுங்கு படமாக ஒரே நேரத்தில் வெளியாகிறது. இயக்குநர் ஓம் ராவத் இயக்கும் இப்படம், டி சிரீஸ் மற்றும் ரெட்ரோஃபைல்ஸ் ஆகிய முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களின் தயாரிப்பில், இந்திய அளவில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இப்படத்தின் டீசர் மற்றும் போஸ்டர் வெளியிடப்படும் இடமும், தேதியும் அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பெரும் பொருட் செலவில் 3டி தொழில் நுட்பத்தில் வெளியாகும் ஆதி புருஷ்

பெரும் பொருட் செலவில் 3டி தொழில் நுட்பத்தில் வெளியாகும் ஆதி புருஷ்

பாலிவுட்டில் வெளியான 'தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்' என்ற படத்தை இயக்கி, தேசிய விருதை வென்ற இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'ஆதி புருஷ்'. இதில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடித்திருக்கிறார். இவர்களுடன் முன்னணி நட்சத்திர நடிகர்களான சயீஃப் அலி கான் மற்றும் சன்னி சிங் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். மிகப்பெரும் பொருட் செலவில் இந்திய அளவில் ஐமேக்ஸ் மற்றும் 3 டி தொழில் நுட்பத்தில் இப்படம் வெளியாகிறது. பிரம்மாண்டமும் 3 டி தொழில் நுட்பமும், கதையும் படத்தின் பிளஸ் பாயிண்ட் எனலாம்.

வாரிசு, துணி படத்துடன் மோதும் ஆதி புருஷ்

வாரிசு, துணி படத்துடன் மோதும் ஆதி புருஷ்

'ஆதி புருஷ்' படத்தின் அறிவிப்பு வெளியானது முதல் ரசிகர்களிடத்தில் இப்படத்தை பற்றிய ஆர்வமும், எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. படத்தைப் பற்றிய புதிய தகவலுக்காக காத்திருந்த அவர்களுக்கு, படக் குழு, இப்படத்தின் டீசர் மற்றும் போஸ்டரை வெளியாகும் தேதியும், இடமும் அறிவித்துள்ளது ரசிகர்களை உற்சாகமடைய செய்திருக்கிறது. அக்டோபர் இரண்டாம் தேதி அன்று உத்தரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரையில் இப்படத்தின் டீசர் மற்றும் போஸ்டர் வெளியிடப்படவிருக்கிறது. இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் தேதி அன்று வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அயோத்தியின் சரயு நதிக்கரையில் டீசர் வெளியீடு

அயோத்தியின் சரயு நதிக்கரையில் டீசர் வெளியீடு

மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்வில் படத்தின் இயக்குநர் ஓம் ராவத், தயாரிப்பாளர் பூஷன் குமார், பிரபாஸ் மற்றும் படத்தின் நாயகி கீர்த்தி சனோன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். மேலும் சில விஐபிக்கள் கலந்துக்கொள்ள உள்ளனர். அதுகுறித்த அறிவிப்பு பின்னர் வெளியாகும் என தெரிகிறது. தீமைக்கும், நன்மைக்கும் இடையேயான போட்டி குறித்து, ராமாயணத்தை மையப்படுத்தி தயாரான இந்த திரைப்படம், உத்திரப்பிரதேசத்தில் உள்ள ராமர் பிறந்த பூமியாக இந்து மக்களால் நம்பப்படும் அயோத்தியில், அதுவும் சரயு நதிக்கரையில், ஆதி புருஷ் படத்தின் டீசர் மற்றும் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வு நடைபெறுவது பொருத்தமானதாக அமைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X