பாகுபலி கலெக்ஷனை விடுங்க.. சாஹோ வசூல் கூட வரலையே.. ராதே ஷ்யாம் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹைதராபாத்: 300 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட நடிகர் பிரபாஸின் ராதே ஷ்யாம் திரைப்படம் முதல் நாளில் ரொம்பவே சுமாரான ஓப்பனிங் தான் என அதிர்ச்சிகரமான பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்டுகள் வந்துள்ளன.
ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே, சத்யராஜ், ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள ராதே ஷ்யாம் திரைப்படம் மார்ச் 11ம் தேதி திரைக்கு வந்தது.
பிரம்மாண்ட காதல் கதை படமாக உருவாகி உள்ள இந்த படத்தில் விஷுவலை தவிர வேற ஒன்றுமே நல்லா இல்லை என விமர்சகர்கள் படத்தை கிழித்துத் தொங்கவிட்டுள்ளனர்.

2000 கோடி வசூல்
ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்த பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம் திரைப்படங்கள் 2000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து பாலிவுட் சூப்பர்ஸ்டார்களையே கொலைநடுங்க வைத்தது. நடிகர் பிரபாஸ் பான் இந்திய நடிகராக இமிடியேட்டாக புரமோஷன் ஆனார். ஆனால், பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் வெளியான படங்கள் சரியாக போகவில்லை.

300 கோடி பட்ஜெட்
பாகுபலி படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் நடிக்கும் படங்கள் எல்லாமே 200 கோடி முதல் 300 கோடி பட்ஜெட் என்றே கூறப்படுகிறது. பணத்தை தண்ணி போல வாரி இரைக்க தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கும் நிலையில், இயக்குநர்கள் சரியான திரைக்கதையுடன் படத்தை அணுகாமல் போவதே இப்படி பெரிய இழப்பு ஏற்பட காரணம் என்கின்றனர்.

பாகுபலி, சாஹோவை முந்தவில்லை
பாகுபலி, சாஹோ திரைப்படங்களின் முதல் நாள் வசூலை ராதே ஷ்யாம் படம் முந்தவில்லை எனக் கூறப்படுகிறது. டோலிவுட்டிலேயே ராதே ஷ்யாம் திரைப்படம் முதல் நாளில் 30 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்திருப்பதாகவும், தமிழ்நாட்டில் 5 கோடி ரூபாய் கூட வசூல் செய்யவில்லை என்றும் இந்தியில் வெறும் 4 கோடி தான் வசூல் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

சாஹோ படமே
பாகுபலி படத்திற்கு பிறகு வெளியான சாஹோ திரைப்படமே இந்தி பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளில் 25 கோடி வரை வசூல் செய்த நிலையில், ராதே ஷ்யாம் திரைப்படம் வெறும் 4 கோடி மட்டுமே வசூல் ஈட்டியிருப்பதாக வெளியாகி உள்ள தகவல்கள் படம் பெரும் தோல்வியை சந்தித்துள்ளதை உறுதிப்படுத்தி உள்ளது. விமர்சனங்களும் படத்திற்கு எதிராக எழுந்துள்ள நிலையில், இதற்கு மேல் படம் பெரிய வசூலை குவிக்க வாய்ப்புகள் குறைவு தான்.
Recommended Video


ராஜமெளலி படம் வருது
வரும் மார்ச் 25ம் தேதி ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் நடிப்பில் உருவாகி உள்ள ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் எப்படி இருக்கப் போகிறதோ? எதிர்பார்த்த அளவுக்கு மிகப்பெரிய வசூல் வேட்டையை அந்த படம் அள்ளுமா? என்பதை நோக்கி ஒட்டுமொத்த திரைத்துறையே காத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











