பெரியப்பா கிருஷ்ணம் ராஜு மறைவு.. கண்ணீர் விட்டு கதறிய பிரபாஸ்.. துடித்துப் போன ரசிகர்கள்

ஹைதராபாத்: ரெபல் ஸ்டார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வந்த மூத்த நடிகர் கிருஷ்ணம் ராஜு உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 83.

கிருஷ்ணம் ராஜுவின் உறவினரான நடிகர் பிரபாஸ், தங்கள் குடும்பத்தின் மூத்த உறுப்பினர் மறைவை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுத வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது.

நடிகர் பிரபாஸுக்கு அவரது ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய சினிமா ரசிகர்கள் பலரும் ஆறுதல் சொல்லி வருகின்றனர்.

கிருஷ்ணம் ராஜு காலமானார்

கிருஷ்ணம் ராஜு காலமானார்

ரெபல் ஸ்டார் என டோலிவுட் ரசிகர்கள் கொண்டாடி வந்த மூத்த நடிகர் கிருஷ்ணம் ராஜு வயது மூப்பு மற்றும் உடல் நலக் குறைவு காரணமாக இன்று ஹைதராபாத்தில் காலமானார். அவரது மறைவு செய்தி ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அரசியலில் ஆர்வம் கொண்ட கிருஷ்ணம் ராஜூ, இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், மறைந்த பிரதமர் வாஜ்பாய் அரசில் அமைச்சராகவும் பதவி வதித்துள்ளார்.

பிரபாஸ் பெரியப்பா

பிரபாஸ் பெரியப்பா

நடிகர் பிரபாஸின் அப்பா சூர்யாநாராயண ராஜுவின் அண்ணன் தான் நடிகர் கிருஷ்ணம் ராஜு. தனது பெரியப்பாவுடன் பெரிய பாண்டிங்கில் எப்போதும் இருந்து வந்த பிரபாஸ், இன்று அவரது மறைவால் ரொம்பவே மனம் வாடி உடைந்து போய் விட்டார். பெரியப்பாவின் உடலை பார்த்ததும் தாங்க முடியாத சோகத்தால் கதறிய அழுது விட்டார்.

கதறி அழுத பிரபாஸ்

கதறி அழுத பிரபாஸ்

தனத் பெரியப்பா உயிரிழந்த துக்கம் தாங்க முடியாமல் நடிகர் பிரபாஸ் கண்ணீர் விட்டு அழுத காட்சிகள் சோஷியல் மீடியாவில் அதிகளவில் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன. நடிகர் பிரபாஸுக்கு டோலிவுட் ரசிகர்களையும் தாண்டி ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களும் ஆறுதல் சொல்லி வருகின்றனர்.

மகேஷ் பாபு, பவன் கல்யாண்

மகேஷ் பாபு, பவன் கல்யாண்

கிருஷ்ணம் ராஜு காலமான செய்தி கேட்டு ஒட்டுமொத்த டோலிவுட்டும் துடித்துப் போனது. சைமா விருது விழாவால் சந்தோஷமாக இருந்த அல்லு அர்ஜுன் முதல் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மகேஷ் பாபு மற்றும் பவன் கல்யாண் உள்ளிட்டோர் நேரடியாக சென்று நடிகர் பிரபாஸுக்கு ஆறுதல் சொன்ன நிலையில், அவர்களுக்கு பிரபாஸின் ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். நாளை முழு அரசு மரியாதையுடன் கிருஷ்ணம் ராஜுவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X