»   »  பாகுபலி பிரபாஸுக்கு திருமணம்: அந்த நடிகையுடன் அல்ல

பாகுபலி பிரபாஸுக்கு திருமணம்: அந்த நடிகையுடன் அல்ல

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பாகுபலி 2 படத்தில் பிசியாக இருக்கும் நடிகர் பிரபாஸுக்கும் விசாகப்பட்டினத்தை சேர்ந்த பெண்ணுக்கும் அடுத்த ஆண்டு திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

டோலிவுட் ரசிகர்களிடையே பிரபலமாக இருந்த பிரபாஸ் ராஜமவுலி இயக்கத்தில் பாகுபலி படத்தில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டார். அவர் தற்போது பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தில் பிசியாக உள்ளார்.

Prabhas to ditch bachelorhood soon

பாகுபலியை போன்றே அதன் இரண்டாம் பாகமும் நிச்சயம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகும் என்று ரசிகர்கள் தற்போதே சத்தியம் செய்கிறார்கள். இந்நிலையில் பிரபாஸின் திருமண செய்தி வெளியாகியுள்ளது.

37 வயதாகும் பிரபாஸுக்கும் விசாகப்பட்டினத்தை சேர்ந்த பெண்ணுக்கும் வரும் டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதாம். பெரியோரால் பார்த்து நிச்சயிக்கப்படும் இந்த பெண்ணுக்கும், பிரபாஸுக்கும் அடுத்த ஆண்டு திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

முன்னதாக பிரபாஸுக்கும் தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ள ஒருவருக்கும் காதல் என்றும், அவர்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளார்கள் என்றும் கிசுகிசுக்கப்பட்டது.

English summary
Baahubali Prabhas is reportedly set to get married to a girl from Vizag next year.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil