»   »  ஒரே நேரத்தில் 10-15 வகை பிரியாணியை ஃபுல் கட்டு கட்டுவார் பிரபாஸ்: ராஜமவுலி

ஒரே நேரத்தில் 10-15 வகை பிரியாணியை ஃபுல் கட்டு கட்டுவார் பிரபாஸ்: ராஜமவுலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: டயட்டில் இல்லாத நாளில் பிரபாஸ் 15 வகை பிரியாணியை சாப்பிடத்தாக இயக்குனர் ராஜமவுலி தெரிவித்துள்ளார்.

பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களுக்காக பிரபாஸ் 5 ஆண்டுகளை ஒதுக்கினார். இந்த படங்களுக்காக அவர் தனது வீட்டில் ஜிம் வைத்து உடலை கும்மென்று ஆக்கினார்.

படத்திற்காக அவர் வெயிட் போட்டார். இந்நிலையில் பிரபாஸ் பற்றி ராஜமவுலி லண்டன் நிகழ்ச்சி ஒன்றில் கூறும்போது,

டயட்

டயட்

பாகுபலி படத்திற்காக பிரபாஸ் டயட்டில் இருந்தார். மாதம் ஒரு நாள் சீட் மீல் டே அதாவது டயட் கிடையாது. அன்று மட்டும் பிரபாஸ் சாப்பிடும் சாப்பாட்டை பார்க்க வேண்டுமே.

பிரியாணி

பிரியாணி

பிரபாஸ் 10 முதல் 15 வகை பிரியாணி சாப்பிடுவார். வெறும் பிரியாணி. நான் மிகைப்படுத்தி சொல்லவில்லை. அத்தனை வகை பிரியாணி இருப்பது கூட நமக்கு எல்லாம் தெரியாது.

மீன்

மீன்

வகை வகையான மீன்கள், சிக்கின், மட்டன் என்று வெலுத்துக் கட்டுவார் பிரபாஸ். அவர் சாப்பிடும் வகைகளை உங்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாது.

சட்னி

சட்னி

தன் கண் முன்பு அத்தனை வகையான உணவு இருந்தாலும் சட்னி இல்லாமல் சாப்பிட மாட்டார். ஒரு நாள் இரவு 2 மணி வரை கால்பந்து விளையாடினோம். விளையாடி முடிந்த பிறகு சாப்பிட போனார் பிரபாஸ்.

மச்சான்

மச்சான்

சாப்பாட்டை பார்த்த பிரபாஸ் தனது மச்சானிடம் சட்னி கேட்டார். அவர் வீட்டிற்கு சென்று தூங்கிய தனது மனைவியை எழுப்பி சட்னி செய்யச் சொல்லி வாங்கிக் கொடுத்தார். சட்னியை சாப்பிட்ட பிறகே பிற வகை உணவை சாப்பிட்டார் என்றார் ராஜமவுலி.

English summary
Director SS Rajamouli said that his Baahubali star Prabhas eats 10- 15 varieties of briyani during cheat meal day.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil