»   »  எனக்கு ஏற்ற ஜோடி அனுஷ்கா தான்: பளிச்சென்று சொன்ன பிரபாஸ்

எனக்கு ஏற்ற ஜோடி அனுஷ்கா தான்: பளிச்சென்று சொன்ன பிரபாஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: சாஹோ படத்திற்கு அனுஷ்கா தான் தனக்கு ஏற்ற ஜோடி என்று நடிகர் பிரபாஸ் தெரிவித்துள்ளார்.

பாகுபலி 2 படத்தை அடுத்து பிரபாஸ் நடித்து வரும் படம் சாஹோ. சுஜீத் இயக்கி வரும் இந்த படத்தில் பிரபாஸ் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.


சாஹோ படத்திற்காக பிரபாஸ் தனது உடல் எடையை குறைத்துள்ளார்.


ஹீரோயின்

ஹீரோயின்

சாஹோ படத்தின் ஹீரோயினாக அனுஷ்காவை ஒப்பந்தம் செய்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அனுஷ்காவை தனக்கு ஜோடியாக போடுமாறு பிரபாஸே கூறினாராம்.


பிரபாஸ்

பிரபாஸ்

சாஹோ படத்திற்கு பாலிவுட் நடிகை எல்லாம் வேண்டாம் அனுஷ்காவையே ஒப்பந்தம் செய்யுங்கள். அவர் தான் எனக்கு ஏற்ற ஜோடி என்று பிரபாஸ் இயக்குனரிடம் தெரிவித்தாராம்.


ஹைதராபாத்

ஹைதராபாத்

சாஹோ படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. அடுத்ததாக படப்பிடிப்பை மும்பையில் நடத்த திட்டமிட்டுள்ளார் சுஜீத் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


அனுஷ்கா

அனுஷ்கா

முன்னதாக பிரபாஸும், அனுஷ்காவும் சேர்ந்து பில்லா, மிர்ச்சி, பாகுபலி 1 மற்றும் 2 ஆகிய நான்கு படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். இந்நிலையில் ஐந்தாவது முறையாக மீண்டும் ஜோடி சேர்கிறார்கள்.


English summary
According to reorts, "Prabhas proposed Anushka as lead in his upcoming movie Saaho as he felt she will be the perfect match."

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil