»   »  ராஜமவுலியோடு பாலிவுட் போகும் பிரபாஸ்: கரண் மீது கொலவெறியில் கான்கள்

ராஜமவுலியோடு பாலிவுட் போகும் பிரபாஸ்: கரண் மீது கொலவெறியில் கான்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பாலிவுட் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார் பிரபாஸ்.

பாகுபலி 2 படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளது. இந்தியில் டப் செய்யப்பட்ட பாகுபலி 2 வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது. இதை பார்த்து கான்கள் மிரண்டு போயுள்ளனர்.


பாகுபலி 2 படத்தின் இந்தி பதிப்பை வெளியிட்டவர் பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார்.


கரண்

கரண்

கரண் ஜோஹாருக்கு பிரபாஸை இந்தி படத்தில் அதுவும் ராஜமவுலி இயக்கத்திலேயே நடிக்க வைக்க ஆசை. இதை அவர் பிரபாஸிடமே தெரிவித்தார். ஆனால் பிரபாஸ் பதில் சொல்லாமல் இருந்தார்.
பிரபாஸ்

பிரபாஸ்

கரண் ஜோஹாரின் விருப்பத்தை நிறைவேற்றி வைக்க முடிவு செய்துள்ளார் பிரபாஸ். இது குறித்து அவர் கூறும்போது, பாலிவுட்டில் உடனே நடிக்க திட்டம் இல்லை. ஆனால் அது இன்டரஸ்டிங்காக உள்ளது என்றார்.
ராஜமவுலி

ராஜமவுலி

ராஜமவுலி மற்றும் கரணுடன் சேர்ந்து இத்தனை ஆண்டுகள் வேலை செய்துள்ளேன். அதனால் மீண்டும் அவர்களுடன் சேர்ந்து பணியாற்றுவது எனக்கு மிகவும் வசதியானது என்று பிரபாஸ் தெரிவித்துள்ளார்.
கான்கள்

கான்கள்

ஏற்கனவே பாகுபலி 2 வசூலால் பாலிவுட் பிரபலங்கள் பிரபாஸை பார்த்து மிரண்டு போயுள்ளனர். இந்நிலையில் பிரபாஸ் நேரடி இந்தி படத்தில் நடிக்க உள்ளார் என்பது அவர்களுக்கு லைட்டா பயத்தை அளித்துள்ளது.


English summary
Prabhas is interested in acting in SS Rajamouli's direction and Karan Johar's production for a direct hindi movie. The trio has worked together for Baahubali and Baahubali 2.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil