»   »  அதைப் பற்றிக் கேட்டாலே கடுப்பாகும் பிரபாஸ்!

அதைப் பற்றிக் கேட்டாலே கடுப்பாகும் பிரபாஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : 'பாகுபலி' வரிசைப் படங்களுக்கு முழுவதுமாக ஐந்து வருடங்களைச் செலவழித்திருக்கிறார் பிரபாஸ். அந்தப் படத்தில் நீண்ட நாட்களாக நடித்ததால் அனுஷ்கா, தமன்னா, ராணா உள்ளிட்ட பலரை தனது வாழ்நாள் நண்பர்களாகப் பெற்றார்.

பிரபாஸும், அனுஷ்காவும் சில விழாக்களில் ஒன்றாகக் கலந்துகொண்டதால் அனுஷ்காவுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார் பிரபாஸ். அது தொடர்பான கேள்விகளைத் தவிர்த்து வந்த பிரபாஸ் இப்போது பதில் சொல்லியிருக்கிறார்.

தற்போது, பிரபாஸ் 'சாஹோ' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார்.

கிசுகிசு :

கிசுகிசு :

கடந்த இரண்டு வருடங்களாகவே பிரபாஸ் திருமணம் பற்றிய கிசுகிசு பரவிய வண்ணம் உள்ளது. ஒவ்வொரு முறை அதுபற்றிக் கேட்கும்போதும் மறுத்துவந்தார். வரும் டிசம்பரில் அனுஷ்காவுக்கும், பிரபாஸுக்கும் நிச்சயதார்த்தம் நடக்கப் போவதாகவும் தகவல் பரவியது.

கடுப்பான பிரபாஸ் :

கடுப்பான பிரபாஸ் :

சமீபத்தில் ஒரு செய்தியாளர் திருமணம் எப்போது என்று கேட்டதும் பிரபாஸ் கடுப்பானார். இதுகுறித்து பிரபாஸ் கூறும்போது, ‘நான் கூச்ச சுபாவம் உள்ளவன். பொது இடத்தில் எனது தனிப்பட்ட வாழ்க்கையான திருமணத்தைப் பற்றி யாரும் கேள்வி கேட்காதீர்கள்.' என்றார்.

அசௌகரியமாக உணர்கிறேன் :

அசௌகரியமாக உணர்கிறேன் :

'இப்படிக் கேட்பதை அருவெறுப்பாக நினைக்கிறேன். தொடர்ந்து இதுபோல் கேள்வி கேட்டு என்னை அசௌகரியமான நிலைக்கு ஆளாக்காதீர்கள். திருமணம் எப்போது நடக்கிறதோ அப்போது நானே அதை வெளிப்படையாகச் சொல்வேன்.

இப்போது நேரம் இல்லை :

இப்போது நேரம் இல்லை :

நான் நடிக்கும் படங்களில் நடிப்பவர்களுடன் என்னை இணைத்து கிசுகிசுக்கள் எழுவதில் மகிழ்ச்சி கொள்கின்றனர். நான் ஒரு படத்தை முடித்துவிட்டு அடுத்த படப்பிடிப்புக்கு ஓடிச்செல்லும் நிலையில் இல்லை. தேர்வு செய்து குறைந்த எண்ணிக்கையிலான படங்களில் மட்டுமே நடிக்கிறேன். அதனால் மிகச் சிலருடன் மட்டுமே நடிக்க முடியும். அதைக் காரணமாக வைத்து நீங்களாகவே எதையும் நினைத்துக் கொள்ளாதீர்கள்' எனக் கூறியிருக்கிறார்.

English summary
The gossips were spreaded about Prabhas and Anushka for the past two years. In this case, Prabhas has angered by the questions about marriage in press meet.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil