»   »  பாகுபலிக்கும் பொம்மாயிக்கும் லவ்வாமே... விரைவில் டும் டும் டும்?

பாகுபலிக்கும் பொம்மாயிக்கும் லவ்வாமே... விரைவில் டும் டும் டும்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பாகுபலி படப்பிடிப்பின் போது தெலுங்கு நடிகர் பிரபாசுக்கும், நடிகை அனுஷ்காவுக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும், விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுந்தர்.சி இயக்கத்தில் மாதவன் நடித்த ரெண்டு படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் அனுஷ்கா. அருந்ததி படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

அதனைத் தொடர்ந்து வேட்டைக்காரன், சிங்கம், வானம், தாண்டவம், இரண்டாம் உலகம், லிங்கா, என்னை அறிந்தால், பாகுபலி என வரிசையாக வெற்றிப்படங்களைத் தந்து தமிழில் முன்னணி நாயகிகளுள் ஒருவராக வலம் வருகிறார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கில் அனுஷ்கா முன்னணி நடிகைகளுள் ஒருவர் தான்.

பாகுபலி...

பாகுபலி...

இந்நிலையில், ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் ஜோடியாக அனுஷ்கா நடித்திருத்துள்ள பாகுபலி படத்தின் முதல்பாகம் வெளியாகி வசூலில் சாதனை புரிந்து வருகிறது. முதல் பாகத்தில் பிரபாஸுக்கு ஜோடி தமன்னா தான் என்றாலும், இரண்டாம் பாகத்தில் தந்தை பாகுபலிக்கு ஜோடியாக அனுஷ்காவின் காதல் காட்சிகள் வரவிருக்கிறது.

காதல்...

காதல்...

இந்நிலையில், பாகுபலி பட படப்பிடிப்பின் போது அனுஷ்காவுக்கும், பிரபாஸுக்கும் காதல் மலர்ந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களின் காதலுக்கு இரு வீட்டு பெற்றோர்களும் பச்சைக்கொடி காட்டி விட்டதாக தெலுங்குப் பட உலகில் கிசுகிசுக்கப்படுகிறது.

அறிவிப்பு...

அறிவிப்பு...

பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் அடுத்தாண்டு ரிலீஸ் ஆகிறது. அதனைத் தொடர்ந்து பிரபாஸ்- அனுஷ்கா திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

3 ஆண்டுகளுக்குப் பின்...

3 ஆண்டுகளுக்குப் பின்...

ஆனால், சமீபத்திய பேட்டி ஒன்றில் தன் கைவசம் உள்ள படங்களை முடிக்க 3 ஆண்டுகள் ஆகும் என அனுஷ்கா கூறியிருந்தார். அதன்படி, தற்போது திருமண அறிவிப்பை மட்டும் வெளியிட்டு விட்டு 3 ஆண்டுகள் கழித்து திருமணம் செய்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.

English summary
The sources says that, actor Prabhas and Anushka fell in love with eachother in the sets of Baahubali.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil