»   »  பிரபாஸுக்கு இந்த நடிகையுடன் தான் திருமணமா? - பரவும் செய்தி.. உண்மை என்ன?

பிரபாஸுக்கு இந்த நடிகையுடன் தான் திருமணமா? - பரவும் செய்தி.. உண்மை என்ன?

Posted By:
Subscribe to Oneindia Tamil
பிரபாஸுக்கும் சிரஞ்சீவி தம்பி மகளுக்கும் திருமணமா? உண்மை என்ன?

ஐதராபாத் : தெலுங்கு நடிகர் பிரபாஸும், நடிகை அனுஷ்காவும் காதலித்து வருவதாகவும், இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகவும், சில மாதங்களுக்கு முன்பு வதந்திகள் பரவின.

இருவரும் இணைந்து பங்கேற்ற பட விழாக்களால் இவர்களைப் பற்றிப் பரவிய வதந்திகள் அதிகரித்தன. இந்தச் செய்தியை இருவருமே மறுத்தனர்.

இந்நிலையில், பிரபாஸின் திருமணம் விரைவில் நடக்கவிருப்பதாக மீண்டும் செய்திகள் வெளியாகி வருகின்றன. உண்மை என்ன?

திருமண வதந்தி

திருமண வதந்தி

திருமணச் செய்திகளால் ஒரு கட்டத்தில் கடுப்பான பிரபாஸ், அனுஷ்கா இருவருமே, திருமணம் குறித்த கேள்விகளைத் தவிர்த்து வந்தனர். இருவருமே அடுத்தடுத்த படங்களில் பிஸியாகி விட்டதால் திருமண வதந்தி சில மாதங்களாக குறைந்து வருகிறார்.

மீண்டும் கிளம்பும் வதந்தி

மீண்டும் கிளம்பும் வதந்தி

அனுஷ்கா 'பாகமதி' படத்தில் நடித்தார். அந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. பிரபாஸ் 'சாஹோ' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், பிரபாஸ் திருமணம் பற்றிய செய்திகள் மீண்டும் கிளம்பியுள்ளன.

நிஹாரிகா

நிஹாரிகா

இந்த முறை பிரபாஸுக்கு ஜோடியாக சிக்கியது அனுஷ்கா அல்ல. நிஹாரிகா. விஜய் சேதுபதியுடன் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தில் நடித்த நிஹாரிகா தான் பிரபாஸை திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக செய்திகள் வெளியாகின்றன.

சிரஞ்சீவி தம்பி மகள்

சிரஞ்சீவி தம்பி மகள்

நிஹாரிகா, சிரஞ்சீவியின் தம்பி நாகேந்திர பிரசாத்தின் மகள். இவர் சிரஞ்சிவி நடிக்கும் 'சைரா நரசிம்ம ரெட்டி' படத்திலும் நடிக்கிறார். நிஹாரிகாவுக்கும், பிரபாஸுக்கும் விரைவில் நிச்சயதார்த்தம் நடக்கவிருப்பதாக தெலுங்கு ஊடகங்கள் எழுதி வருகின்றன.

சிரஞ்சீவி குடும்பத்தினர் மறுப்பு

சிரஞ்சீவி குடும்பத்தினர் மறுப்பு

சிரஞ்சீவி குடும்பத்தினர் இந்தச் செய்திகளால் அதிர்ச்சியடைந்துள்ளனர். தற்போது தான் நல்ல படங்கள் கிடைத்து வளர்ந்து வருகிறார் நிஹாரிகா. அவரது திருமணம் குறித்து தாங்கள் பேச்சே எடுக்கவில்லை எனத் தெரிவித்திருக்கிறார்கள்.

English summary
Prabhas to marry Niharika konidela is the latest sensational news on telugu media. But, Chiranjeevi family denied this.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X