»   »  அமரேந்திர பாகுபலியைத் தொடர்ந்து அதிரடி போலீசாக மாறும் பிரபாஸ்

அமரேந்திர பாகுபலியைத் தொடர்ந்து அதிரடி போலீசாக மாறும் பிரபாஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பாகுபலியில் அமரேந்திர பாகுபலியாய் அசத்திய பிரபாஸ் அடுத்து போலீஸ் அதிகாரியாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

பாகுபலி என்ற ஒரே படத்தின் மூலம் உலகளவில் தெரிந்த நடிகராக மாறியிருக்கிறார் பிரபாஸ். தற்போது பாகுபலி 2 படத்தில் நடித்து வரும் பிரபாஸ் அடுத்து எந்த மாதிரியான படத்தில் நடிக்கப் போகிறார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

Prabhas To Play A Cop In His Next

இந்நிலையில் 'ரன் ராஜா ரன்' புகழ் சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருகின்றன. இந்தப் படத்தில் முதல் முறையாக பிரபாஸ் போலீஸாக நடிக்கவிருப்பதாக கூறுகின்றனர்.

பாகுபலி 2 வுக்குப் பின் பிரபாஸ் நடிக்கும் இந்த படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

பல பெரிய இயக்குநர்களும் பிரபாசை இயக்க காத்திருக்கும் நிலையில் சுஜீத்தின் மீதுள்ள நம்பிக்கை காரணமாக இந்த வாய்ப்பை பிரபாஸ் கொடுத்திருப்பதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

13 வருடங்களில் 19 படங்கள் நடித்திருக்கும் பிரபாஸ் இதுவரை எந்தப் படத்திலும் போலீஸ் வேடத்தில் நடித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sources Said After the completion of Baahubali The Conclusion Prabhas will play a cop in his next film, directed by 'Run Raja Run' Fame Sujeeth.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil