மிரட்டும் கொரோனா... வெளிநாட்டில் இருந்து திரும்பியதும் தன்னையே தனிமைப்படுத்திக் கொண்ட, பிரபல ஹீரோ!

By

சென்னை: கொரோனாவுக்காக, தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டதாக பிரபல ஹீரோ பிரபாஸ் தெரிவித்துள்ளார்.

'பாகுபலி' மூலம் தேசிய அளவில் கவனம் பெற்றவர், தெலுங்கு ஹீரோ பிரபாஸ். இதை தொடர்ந்து மெகா பட்ஜெட் படமான 'சாஹோ'வில் நடித்தார்.

இதில் ஸ்ரத்தா கபூர், ஜாக்கி ஷெராப், அருண் விஜய், நீல் நிதின் முகேஷ் உட்பட பலர் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, இந்தியில் மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்தப் படம் உருவானது.

ஜார்ஜியா

ஜார்ஜியா

ஆனால், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதையடுத்து இந்தப் படத்தை தயாரித்த யுவி கிரியேஷின் அடுத்த படத்திலும் பிரபாஸ் நடித்து வருகிறார். இதை கே கே ராதாகிருஷ்ணா இயக்கி வருகிறார். படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. இதில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். இதன் ஷூட்டிங் ஜார்ஜியாவில் நடந்து வந்தது.

பூஜா ஹெக்டே

பூஜா ஹெக்டே

இந்தியாவில் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டபோதும், பிரபாஸ் படத்தின் ஷூட்டிங் அங்கு தொடர்ந்து நடந்தது. நடிகை பூஜா ஹெக்டே, கடந்த சில நாட்களுக்கு முன் அங்கு சென்று படப்பிடிப்பை முடித்துக் கொண்டு திரும்பினார். இதுபற்றி இன்ஸ்டாகிராமில் அவர் தகவல் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் நடிகர் பிரபாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் ஷூட்டிங்கை முடித்துவிட்டு ஐதராபாத் திரும்பினர்.

மக்கள் ஊரடங்கு

மக்கள் ஊரடங்கு

இந்நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300-ஐ நெருங்கி வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள், துணிக்கடைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று இன்று (மார்ச் 22) மக்கள் ஊரடங்கிற்கு கடைபிடிக்கப் படுகிறது.

என்னை நானே

என்னை நானே

இதனிடையே, ஜார்ஜியாவில் இருந்து இந்தியா திரும்பிய நடிகர், பிரபாஸ் யாரையும் சந்திக்கவில்லை. இந்நிலையில், தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதுபற்றி தனது இன்ஸ்டாகிராமில், 'வெளிநாட்டுப் படப்பிடிப்பைப் பத்திரமாக முடித்துத் திரும்பியுள்ளோம். கோவிட்-19 பரவுவதைக் கருத்தில் கொண்டு என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன். நீங்களும் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X