»   »  கூட்டத்திற்கு பயந்து அமெரிக்காவில் மாறு வேடத்தில் ஊர் சுற்றும் நம்ம ஊரு வசூல் மன்னன்

கூட்டத்திற்கு பயந்து அமெரிக்காவில் மாறு வேடத்தில் ஊர் சுற்றும் நம்ம ஊரு வசூல் மன்னன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: நடிகர் பிரபாஸ் அமெரிக்காவில் மாறு வேடத்தில் ஊர் சுற்றுகிறாராம்.

பாகுபலி படத்தில் நடிக்க இயக்குனர் ராஜமவுலி பிரபாஸிடம் ஒன்றரை ஆண்டு கால்ஷீட் கேட்டார். ஆனால் பிரபாஸோ ஐந்து ஆண்டு கால்ஷீட் கொடுத்தார். அந்த 5 ஆண்டுகளும் அவர் வேறு எந்த படங்களிலும் நடிக்கவில்லை.


பாகுபலி 2 ரிலீஸானதை அடுத்து பிரபாஸ் ஓய்வு எடுக்க அமெரிக்கா சென்றுள்ளார்.


அமெரிக்கா

அமெரிக்கா

பாகுபலி 2 படம் ரூ. 1,400 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. அமெரிக்காவிலும் பாக்ஸ் ஆபீஸில் பாகுபலி 2 புதிய சாதனை படைத்துள்ளது. இதனால் அமெரிக்காவில் எங்கு சென்றாலும் பிரபாஸை மக்கள் அடையாளம் கண்டுகொள்கிறார்கள்.


 பிரபாஸ்

பிரபாஸ்

இந்தியாவில் எங்கு சென்றாலும் அடையாளம் கண்டுபிடித்து விடுவார்கள் என்று நினைத்து பிரபாஸ் அமெரிக்காவுக்கு ஓய்வு எடுக்க சென்றார். ஆனால் அங்கும் மக்கள் தன்னை அடையாளம் கண்டுகொள்வதால் அவர் மாறுவேடத்தில் ஊர் சுற்றுகிறார்.


 சாஹோ

சாஹோ

பாகுபலி 2 படத்தை அடுத்து பிரபாஸ் நடிக்கும் படம் சாஹோ. அந்த படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் தான் துவங்குகிறது. அதனால் ஓய்வு எடுத்த பிறகு படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.


 ஹீரோயின்

ஹீரோயின்

பாகுபலி 2 பட வெற்றிக்கு பிறகு ஹீரோயின்கள் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க லைன் கட்டி நிற்கிறார்கள். சாஹோ படத்தில் பிரபாஸ் ஜோடி யார் என்பதை இயக்குனர் சுஜீத் இன்னும் முடிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


English summary
Prabhas is roaming in disguise in the USA as people notice the Baahubali actor. Prabhas is relaxing in the USA after the release of Baahubali 2.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil