ஆதிபுருஷ் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்? பிரபாஸ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் வெறித்தனமான அப்டேட்

ஐதராபாத்: பிரபாஸ் நடித்துள்ள 'ஆதிபுருஷ்' படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது.

பிரபாஸ் நடிப்பில் ஓம் ராவுத் இயக்கியுள்ள ஆதிபுருஷ் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 12ம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில், ஆதிபுருஷ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகுபலி டூ பான் இந்தியா ஸ்டார்

பாகுபலி டூ பான் இந்தியா ஸ்டார்

தெலுங்கு ரசிகர்களால் டார்லிங் என கொண்டாடப்படும் பிரபாஸ், பாகுபலி திரைப்படம் பான் இந்தியா ஸ்டாராக விஸ்வரூபமெடுத்தார். ராஜமெளலியின் இயக்கத்தில் 2 பாகங்களாக வெளியான பாகுபலி, இந்தியத் திரையுலகையே மிரள வைத்தது. பிரபாஸின் கேரியரில் தரமான சம்பவம் செய்த பாகுபலியால், அவருக்கு அடுத்தடுத்து பான் இந்தியா படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன. ஆனாலும், சாஹோ, ராதே ஷ்யாம் ஆகிய படங்களுக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.

ராமராக அவதாரம் எடுக்கும் பிரபாஸ்

ராமராக அவதாரம் எடுக்கும் பிரபாஸ்

ராதே ஷ்யாம் படத்தைத் தொடர்ந்து 'கேஜிஎஃப்' புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'சலார்', நாக் அஸ்வின் இயக்கும் 'ப்ராஜக்ட் கே' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வரும் பிரபாஸ், ஆதிபுருஷ் படத்திலும் நடித்து முடித்துள்ளார். 'ஆதிபுருஷ்' 2023ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது. 3டி தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படம் ராமாயணத்தை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. பிரபாஸ் ராமராக நடிப்பதையும் படக்குழு அறிவித்துள்ளது.

விரைவில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

விரைவில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ள ஆதிபுருஷ் படத்தை, ஓம் ராவத் இயக்கியுள்ளார். பிரபாஸுடன் பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான், கீர்த்தி சனோன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சைஃப் அலிகான் ராவணன் ரோலிலும், கீர்த்தி சனோன் சீதையாகவும் நடித்துள்ளார். 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

பிரபாஸ் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்

பிரபாஸ் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரபாஸின் உறவினர் கிருஷ்ணம் ராஜூ காலமானார். அதன்பின்னர் பிரபாஸுக்கும் அனுஷ்காவுக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியாகின. பிரபாஸின் ரசிகர்களும் இந்த நல்ல செய்திக்காக தவம் கிடந்தனர். இந்நிலையில், ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் விதமான 'ஆதிபுருஷ்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இதனால், எப்போது வேண்டுமானாலும் ஆதிபுருஷ் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பற்றிய அப்டேட் வரும் என பிரபாஸ் ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X