The Raja Saab trailer: பிரபாஷின் "தி ராஜாசாப்" படத்தின் டிரைலர் வெளியானது!
சென்னை: பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள பான் இந்தியா திரைப்படமான "தி ராஜாசாப்" திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 10ந் தேதி தியேட்டரில் வெளியாக இருக்கும் நிலையில், டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. ஆந்திரா, தெலுங்கானாவில் உள்ள 105 திரையரங்குகளில் இந்த டிரெய்லர் திரையிடப்பட்டது.
பிரபாஸ் நடிக்கும் திகில் மற்றும் நகைச்சுவைத் திரைப்படமான "தி ராஜா சாப்" படத்தை இயக்கிய மாருதி இயக்கி உள்ளார்.மேலும் இப்படத்தில், சஞ்சய் தத், நிதி அகர்வால், ரித்தி குமார், மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தமன் இசையமைக்க, கோடேகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பு பணிகளையும், கார்த்திக் பலானி ஒளிப்பதிவு பணியை மேற்கொண்டுள்ளார். மக்கள் மீடியா ஃபேக்டரி தயாரிப்பில், டி.ஜி. விஷ்வா பிரசாத் தயாரிக்கும் "தி ராஜாசாப்" பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. இது தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.

தி ராஜாசாப் டிரைலர்: தற்போது, "தி ராஜாசாப்" திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. டிரைலர் ஆரம்பிக்கும் போதே, நீ என் கமெண்ட்டுகளை மட்டும் தான் கேட்கணும், அதுபடித்தான் எல்லாத்தையும் செய்ய வேண்டும் என்று ஒரு குரல் சொல்ல, அந்த குரல் சொல்வதை கேட்டு அதன்படியே எல்லாத்தையும் செய்கிறார் பிரபாஸ். அதிரடியான திருப்படங்களுடன் திகிலூட்டும் நகைச்சுவை திரைப்படமான இப்படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக நிதிஅகர்வால் மற்றும் மாளவிகா மோகனன் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் நடித்ததன் மூலம் மாளவிகா தெலுங்கில் அறிமுகமாகி உள்ளார்.
படத்தின் கதை: பெரிய மாளிகைக்கு வாரிசான பிரபாஸ், தனது மூதாதையர்களின் சொத்தான பயன்படுத்தப்படாமல் இருக்கும் அரண்மனையை நிதி பிரச்சனை காரணமாக விற்கப் பார்க்கிறார். ஆனால், அந்த பழைய அரண்மனையில், அமானுஷ்ய சக்தி உள்ளது என்பதை தெரிந்து கொண்ட பிரபாஷ், அமானுஷ்ய சக்தி நிறைந்த அந்த அரண்மனையை தீய சக்திகளிடம் இருந்து மீட்க முயற்சிக்க அரண்மனைக்குள் செல்கிறார். அதன் பின் என்ன நடந்தது என்பது தான் "தி ராஜாசாப்" திரைப்படத்தின் கதை.


Click it and Unblock the Notifications











