»   »  பாகுபலி படத்தில் நடிக்கும்போது கையில் காசு இல்லாமல் அல்லாடிய பிரபாஸ்

பாகுபலி படத்தில் நடிக்கும்போது கையில் காசு இல்லாமல் அல்லாடிய பிரபாஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பாகுபலி படத்தில் நடிக்கும்போது பிரபாஸ் கையில் செலவுக்கு பணம் இல்லை என்று இயக்குனர் ராஜமவுலி தெரிவித்துள்ளார்.

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா உள்ளிட்டோர் நடித்த பாகுபலி 2 படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. பாகுபலி மற்றும் அதன் இரண்டாம் பாகத்தில் நடிக்க வசதியாக பிரபாஸ் கடந்த 5 ஆண்டுகளாக வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை.

இந்நிலையில் இது குறித்து ராஜமவுலி கூறியிருப்பதாவது,

பிரபாஸ்

பிரபாஸ்

பிரபாஸ் பாகுபலி படத்தில் நடிப்பதற்கு முன்பு தொடர்ந்து 3 ஹிட் கொடுத்திருந்தார். தயாரிப்பாளர்கள் எல்லாம் பணத்தை எடுத்துக் கொண்டு பிரபாஸ் பின்பு ஓடினார்கள்.

பாகுபலி

பாகுபலி

பிரபாஸோ தன்னை தேடி வந்த எந்த பட வாய்ப்பையும் ஏற்காமல் பாகுபலி படத்தில் மட்டுமே கவனம் செலுத்தினார். தயாரிப்பாளர்களிடம் இருந்து எதையும் வாங்கக் கூடாது என்று தனது மேனேஜரிடம் கூறினார்.

பணம்

பணம்

பாகுபலி படத்தில் நடிக்கும்போது ஒரு கட்டத்தில் அவருக்கு பணம் இல்லாமல் கஷ்டப்பட்டார். தயாரிப்பாளர்கள் ரொக்கம், செக்குகளோடு அவர் வீட்டிற்கு படையெடுத்தார்கள். சிலர் எதையும் எதிர்பார்க்காமல் பணம் கொடுக்க முன்வந்தனர்.

பயம்

பயம்

தயாரிப்பாளர்கள் படையெடுத்ததை பார்த்து பயந்துபோன பிரபாஸ் எனக்கு போன் செய்தார். இந்த பணத்திற்கும் வேலைக்கும் தொடர்பு இல்லை என்று பத்திரம் எழுதி வாங்கச் சொன்னேன். ஆனால் அவர் மறுத்துவிட்டு பணத்தை வாங்கவில்லை.

விளம்பர படம்

விளம்பர படம்

ரூ. 10 கோடி சம்பளத்தில் விளம்பரப் படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு பிரபாஸை தேடி வந்தது. ஆனால் அவர் அந்த வாய்ப்பை கூட ஏற்க மறுத்துவிட்டார். பிரபாஸுக்கு பொய் சொல்லத் தெரியாது. அவர் யார் மனதையும் காயப்படுத்தக் கூடாது என்று நினைப்பவர் என்றார் ராஜமவுலி.

English summary
SS Rajamouli said that Prabhas was struggling for money when he acted in Baahubali and Baahubali 2 as he didn't accept any movie offer for the past 5 years.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil