»   »  டிசம்பரில் அனுஷ்காவுடன் நிச்சயதார்த்தம்: இது என்ன பிரபாஸ் இப்படி சொல்கிறார்?

டிசம்பரில் அனுஷ்காவுடன் நிச்சயதார்த்தம்: இது என்ன பிரபாஸ் இப்படி சொல்கிறார்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: அனுஷ்காவுடனான உறவு குறித்து முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார் பிரபாஸ்.

பாகுபலி, பாகுபலி 2 படங்கள் ரிலீஸானதில் இருந்து பிரபாஸ், அனுஷ்கா காதலிப்பதாக கூறப்படுகிறது. இதை இருவரும் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் அந்த பேச்சு அடங்கவில்லை.

இந்நிலையில் டிசம்பர் மாதம் அனுஷ்கா, பிரபாஸின் நிச்சயதார்த்தம் என்று கூறப்படுகிறது. இது குறித்து பிரபாஸ் கூறியதாவது,

காதல்

காதல்

அனுஷ்காவும், நானும் காதலிக்கிறோம் என்று வதந்தி பரவிய புதிதில் நான் அப்செட் ஆனேன். ஆனால் அதன் பிறகு வதந்திகளை நான் கண்டுகொள்வது இல்லை.

அனுஷ்கா

அனுஷ்கா

எங்களை பற்றிய காதல் வதந்திகள் பரவக்கூடாது என்று நானும், அனுஷ்காவும் நினைத்தோம். கடந்த 9 ஆண்டுகளாக நாங்கள் குடும்ப நண்பர்களாக உள்ளோம்.

நட்பு

நட்பு

நானும், அனுஷ்காவும் நல்ல நண்பர்கள். காதல் வதந்தி பரவியதும் எங்களுக்குள் ஏதாவது இருக்கிறதோ என்று எனக்கே தோன்ற ஆரம்பித்தது. ஆனால் எங்களுக்குள் காதல் இல்லை.

நடிகை

நடிகை

ஒரு நடிகை ஒரு ஹீரோவுடன் மீண்டும் மீண்டும் நடித்தால் அவர்களுக்கு இடையே காதல் என்று தான் மக்கள் பேசுவார்கள். எங்கள் விஷயத்திலும் அது தான் நடந்துள்ளது என்றார் பிரபாஸ்.

பிரபாஸ்

பிரபாஸ்

வழக்கமாக அனுஷ்காவை பற்றி கேட்டால் பிரபாஸ் நைசாக நழுவிவிடுவார். தற்போது முதல்முறையாக அனுஷ்கா, காதல் வதந்தி பற்றி எல்லாம் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Tollywood star Prabhas has revealed the type of relationship between him and Baahubali lady Anushka.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil