»   »  ராஜமவுலியை வைத்துக் கொண்டே 'அந்த' உண்மையை சொன்ன 'பாகுபலி' பிரபாஸ்

ராஜமவுலியை வைத்துக் கொண்டே 'அந்த' உண்மையை சொன்ன 'பாகுபலி' பிரபாஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் முன்பு ராஜமவுலியின் ரசிகன் கிடையாது என்று நடிகர் பிரபாஸ் தெரிவித்துள்ளார்.

பாகுபலி 2 படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய ஹீரோ பிரபாஸ் கூறுகையில்,

ராஜமவுலி

ராஜமவுலி

ராஜமவுலிகாரு படம் குறித்து தொடர்ந்து 9 மணிநேரம் பேசுவார். அந்த அளவுக்கு அவர் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறார். போர்க்கால படத்தில் நடிக்க வேண்டும் என்பது என் கனவு.

பாகுபலி

பாகுபலி

போர்க்கால படத்தில் நடிக்க ஆசைப்பட்டபோது ராஜமவுலி பாகுபலி படத்தில் நடிக்க கேட்டார். உடனே நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

அனுபவம்

அனுபவம்

பாகுபலி பார்ட் 1 மற்றும் 2ல் நடித்த அனுபவம் சிறப்பானது. படப்பிடிப்பு நடந்தபோதே எங்களுக்கு புல்லரிக்கும் அனுபவம் கிடைத்தது. படத்தை பார்க்கும்போது உங்களால் அதை உணர முடியும்.

ரசிகன்

ரசிகன்

ராஜமவுலியுடன் பேசும்போது எல்லாம் நான் வேறு ஆளக மாறிவிடுகிறேன். உண்மையை சொல்ல வேண்டுமானால் நான் முன்பு ராஜமவுலியின் ரசிகன் கிடையாது. ஆனால் பாகுபலிக்கு பிறகு நான் அவரின் ரசிகனாகிவிட்டேன் என்றார் பிரபாஸ்.

English summary
Prabhas said that he was not a fan of Rajamouli earlier but has become one after working with in Baahubali and Baahubali 2.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil