»   »  என் ரசிக மக்கா, என் மீது இம்புட்டு பாசமாய்யா உங்களுக்கு: திக்குமுக்காடிய பிரபாஸ்

என் ரசிக மக்கா, என் மீது இம்புட்டு பாசமாய்யா உங்களுக்கு: திக்குமுக்காடிய பிரபாஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பாகுபலி 2 படத்தை சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கிய ரசிகர்களுக்கு பிரபாஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிரு்ஷணன் உள்ளிட்டோர் நடித்த பாகுபலி 2 படம் ரிலீஸான 10 நாட்களில் உலக அளவில் ரூ. 1000 கோடி வசூல் செய்துள்ளது.


இதன் மூலம் உலக அளவில் ரூ.1000 கோடி வசூல் செய்த முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்றுள்ளது பாகுபலி 2. இந்த நேரத்தில் படத்தின் நாயகன் பிரபாஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,


அன்பு

அன்பு

என்னை அன்பு மழையில் நனைய வைத்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள ரசிகர்கள் என் மீது காட்டும் அன்புக்கு நான் என்னால் முடிந்த வரை சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முயற்சித்துள்ளேன்.


நெகிழ்ச்சி

நெகிழ்ச்சி

ரசிகர்களின் அன்பால் திக்குமுக்காடிப் போயுள்ளேன். பாகுபலி பயணம் நீண்ட பயணமாகும். அதில் இருந்து நான் எடுத்துக் கொள்ளும் சிலவற்றில் நீங்கள் அனைவரும் உள்ளீர்கள்.


பாசம்

பாசம்

ரசிகர்களாகிய உங்களுக்கு என் அளவு கடந்த அன்பை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை நம்பி வாய்ப்பு அளித்த இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி சாருக்கு பெரிய நன்றி.


பாகுபலி

பாகுபலி

பாகுபலி என்னும் கதாபாத்திரத்தை அளித்து இந்த பயணத்தை மிகவும் ஸ்பெஷலாக ஆக்கிய ராஜமவுலி சாருக்கு நன்றி என பிரபாஸ் உணர்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.


English summary
Prabhas has thanked his fans for all the love they have showered on him. He has also thanked Rajamouli for giving him once-in-a-lifetime character of Baahubali.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil