ஒருவேள காஞ்சனா 3யா இருக்குமோ?.. பிரபாஸின் ராஜாசாப் படத்தில் லட்டு போல 3 ஹீரோயின்கள்!

ஹைதராபாத்: இயக்குநர் மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள 'தி ராஜாசாப்' திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தள்ளிப்போக வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சமூக வலைதளங்களில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

பிரபாஸ் இந்த படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு அடுத்ததாக ஹரி ராகவப்புடி இயக்கத்தில் ஒரு ரொமான்டிக் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தைத் தொடர்ந்து சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ஸ்பிரிட் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Prabhas The Rajasaab movie update goes trending in social media

ஏற்கனவே மாளவிகா மோகனன், நிதி அகர்வால் என 2 ஹீரோயின்கள் பிரபாஸின் தி ராஜாசாப் படத்தில் நடித்து வரும் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இன்னொரு ஹீரோயினும் உள்ளார் என்கின்றனர்.

டப்பிங் முடித்த நிதி அகர்வால்: நிதி அகர்வால் தமிழில் நடித்த ஈஸ்வரன் மற்றும் பூமி படங்கள் ஒரே நாளில் வெளியானாலும் அந்த 2 படங்களும் ஃபிளாப் ஆனதால் தொடர்ந்து தமிழில் நிதி அகர்வாலுக்கு பெரிதாக படங்கள் அமையவில்லை. உதயநிதி ஸ்டாலின் நடித்த கலகத் தலைவன் படத்தில் மட்டும் நடித்திருந்தார். பவன் கல்யாண் உடன் இணைந்து அவர் நடித்த ஹரி ஹர வீர மல்லு படம் பல வருடங்கள் கழித்து சமீபத்தில் வெளியானது. ஓடிடியில் சில தினங்களுக்கு முன்பு வெளியான அந்த படத்தின் காட்சிகளை போட்டு ட்ரோல் செய்து வருகின்றனர். அதிலும், குறிப்பாக நிதி அகர்வால் பவன் கல்யாணை துணி மூட்டையை வைத்து அடிக்கும் காட்சி தான் ஹைலைட். ஹரி ஹர வீர மல்லு படத்தில் மிஸ்ஸான வெற்றி கண்டிப்பாக பிரபாஸ் படத்தின் மூலம் அவருக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காஞ்சனா 3யா?: ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா 3 படத்தில் வேதிகா, ஓவியா, நிக்கி தம்போலி என 3 ஹீரோயின்கள் நடித்ததை போல தற்போது ஹாரர் படமாக உருவாகியுள்ள பிரபாஸின் ராஜாசாப் படத்திலும் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் ரிதி குமார் என மூன்று ஹீரோயின்கள் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜனநாயகனுக்கு தலைவலி?: இந்த டிசம்பருக்கு ராஜாசாப் படம் திட்டமிட்டபடி வெளியாகாமல் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு சென்றால் பான் இந்தியா அளவிலும் ஓவர்சீஸிலும் ஜன நாயகன் படத்துக்கு பெரிய தலைவலியாக மாறும் என்கின்றனர். ஏற்கனவே சூர்யாவின் கருப்பு, சிவகார்த்திகேயனின் பராசக்தி, கார்த்தியின் சர்தார் 2 என ஏகப்பட்ட படங்கள் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

500 கோடி நாயகன்: இந்திய சினிமாவில் அதிகளவில் 500 கோடி வசூலுக்கு சொந்தக்காரராக பிரபாஸ் உள்ளார். சலார் படம் 700 கோடி வசூலை ஈட்டிய நிலையில், ராஜாசாப் படமும் பெரிய வசூல் வேட்டையை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மினிமம் 500 கோடி வசூல் கியாரண்டி என்கின்றனர். சலார் 2, ஸ்பிரிட், கல்கி 2 படமெல்லாம் வந்தால் 1000 கோடி வசூலை அசால்ட்டாக அடிக்கும் என்றும் மல்டி ஸ்டார் படமாக இருக்க தேவையில்லை என்றும் பாக்ஸ் ஆபீஸ் நிபுணர்கள் கூறி வருகின்றனர். பிரபாஸுக்கு எப்போது திருமணம் என்கிற கேள்விகளும் சீக்கிரமே நடக்கும் என்கிற தகவல்களும் உலாவி வருவதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X