»   »  150 கிலோ எடைக்காக தினம் 50 முட்டை, அரை கிலோ சிக்கன் சாப்பிடும் பிரபாஸ்

150 கிலோ எடைக்காக தினம் 50 முட்டை, அரை கிலோ சிக்கன் சாப்பிடும் பிரபாஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாகுபலி முதல் படத்தின் போது 62 கிலோவாக இருந்த தனது உடல் எடையை 130 கிலோவாக அதிகரித்து 6 அடி உயரத்தில் ஆஜானுபாகுவான தோற்றத்தில் நடித்து இருந்தார் பிரபாஸ். தற்போது பாகுபலி 2 படத்திற்காக இன்னும் 20 கிலோ எடையை அதிகரித்து சுமார் 150 கிலோ தோற்றத்துடன் பிரபாஸ் நடிக்க இருக்கிறார் என்று ஹைதராபாத் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன் உள்ளிடோர் நடிப்பில் கடந்த வருடம் வெளியானது 'பாகுபலி'. வெளியான அனைத்து மொழிகளிலும், இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் மாபெரும் வெற்றி பெற்றது. தமிழ் - தெலுங்கு என ஒரே நேரத்தில் உருவான 'பாகுபலி' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாக தயாராகி வருகிறது.

பாகுபலி 2 படத்தின் 2 ஆம் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளதாக கூறியுள்ள இயக்குநர் ராஜமவுலி இந்தப் படத்தின் 3ஆம் பாகமும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். பாகுபலியின் கதை பெரியது. எனவே அது தொடரும். இது ஒரு பெரிய ஃப்ரான்சைஸ். நீண்ட நாட்களுக்கு இருக்கும் என்று கூறியுள்ளார்

தினசரி 50 முட்டை, அரைகிலோ சிக்கன்

தினசரி 50 முட்டை, அரைகிலோ சிக்கன்

பாகுபலி 2வில் அமரேந்திர பாகுபலியான பிரபாஸ் உடல் 150 கிலோவாக அதிகரிக்கப் போகிறது. தனது உடல் எடையை அதிகரிப்பதற்காக இன்னும் ஒரு மாதத்திற்கு தினசரி 50 முட்டை வெள்ளைக்கருவும், அரைக்கிலோ கோழிக்கறியும் சாப்பிடப்போகிறாராம் பிரபாஸ்.

காய்கறிகள், பழங்கள்

காய்கறிகள், பழங்கள்

காய்கறிகள், பழங்கள் சாலட்கள், பழுப்பு அரிசி சாப்பாடு, 100 நிமிட உடற்பயிற்சி என இரும்பு போல உடலை மாற்றப்போகிறாராம் . இதற்காகவே கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் பிரபாஸ்.

அமரேந்திர பாகுபலி

அமரேந்திர பாகுபலி

முதல் பகுதியில் அதிக காட்சிகளில் சிவடுவாக நடித்த பிரபாஸ், இரண்டாவது பகுதியில் அமரேந்திர பாகுபலியாக அதிக காட்சிகளில் நடிக்கப் போகிறார். அதற்கேற்ப உடலமைப்பு கொண்டு வரவேண்டும் என்பதற்காகவே இப்படி பயிற்சி செய்யப் போகிறாராம்.

எஸ்.எஸ். ராஜமவுலி

எஸ்.எஸ். ராஜமவுலி

பாகுபலி படத்தை விட பாகுபலி 2 படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அனுஷ்காவின் அழகிற்கு ஏற்ப பிரபாஸ் தோற்றம் இருக்க வேண்டும் என்பதில் ரொம்பவே மெனக்கெடுகிறாராம் இயக்குநர் எஸ். எஸ். ராஜமவுலி.

அதெல்லாம் சரிதான் கட்டப்பா ஏன் பாகுபலியை கொலை செய்தார்னு இதிலாவது சொல்வாரா? அல்லது 3வது பகுதியில் சொல்வேன் என்று கூறுவாரா ராஜமவுலி?

English summary
For the first part—Baahubali: The Beginning, Prabhas was seen with a huge physique and the actor weighed around 130kg. Now for the sequel, the 6ft tall handsome hunk is going to put 20kg extra, which means he is going to weigh 150kg in the film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil