»   »  கட்டப்பா ஏன் கொன்னாரு... கண்டுபிடிக்கிறதுக்குள்ள "பாகுபலி"யோட மனைவி யாருனு தெரிஞ்சிடுமாம்!

கட்டப்பா ஏன் கொன்னாரு... கண்டுபிடிக்கிறதுக்குள்ள "பாகுபலி"யோட மனைவி யாருனு தெரிஞ்சிடுமாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தாண்டு இறுதிக்குள் பிரபாஸிற்கு திருமணம் செய்து வைப்பதற்கு தீவிரமான ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம்.

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் நடித்த படம் பாகுபலி. கடந்தாண்டு ரிலீசான இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலில் சாதனை புரிந்தது.

இப்படத்தின் இறுதியில் பாகுபலியை கட்டப்பா கொல்வதோடு படம் முடிவடைந்தது. பாகுபலியைக் கட்டப்பா ஏன் கொன்றார் என்ற கேள்விக்கு பதில் அதன் இரண்டாம் பாகத்தில் தெரியும் என ராஜமௌலி தெரிவித்துவிட்டார். இதனால், இன்னமும் ரசிகர்கள் மனதில் இந்தக் கேள்வி பதிலுக்காகக் காத்திருக்கிறது.

பாகுபலி 2...

பாகுபலி 2...

முதலில் இந்தாண்டு இறுதியில் பாகுபலியின் இரண்டாம் வெளியாவதாகக் கூறப்பட்டது. ஆனால், தற்போது படப்பிடிப்புகள் நடந்து வருவதால், அடுத்தாண்டு பாகுபலி 2 ரிலீசாகும் எனத் தெரிகிறது.

பெண் தேடும் படலம்...

பெண் தேடும் படலம்...

இதற்கிடையே, பாகுபலி நாயகனான பிரபாஸுக்கு தீவிரமாக வீட்டில் பெண் பார்த்து வருகிறார்களாம். இந்தாண்டு இறுதிக்குள் எப்படியும் அவரது திருமணத்தை நடத்தி விடுவது என்பதில் உறுதியாக இருக்கிறார்களாம்.

பிரபாஸ் உறுதி...

பிரபாஸ் உறுதி...

சங்கராந்தி விழாவின் போது தனது மாமாவும், பிரபல தெலுங்கு நடிகருமான கிருஷ்ணம் ராஜாவிடம் பிரபாஸும், இந்தாண்டு இறுதிக்குள் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்துள்ளாராம்.

திருமணத்திற்காக...

திருமணத்திற்காக...

எப்படியும் இந்தாண்டு இறுதிக்குள் பாகுபலி 2ம் பாக படப்பிடிப்புகளை முடித்து விட்டு, திருமணத்திற்காக சின்ன பிரேக் எடுத்துக் கொள்வார் பிரபாஸ் என கிருஷ்ணம் ராஜா தெரிவித்துள்ளார்.

யார் அந்த தேவதை...

யார் அந்த தேவதை...

இவரது தகவல்படி பார்த்தால், கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் எனத் தெரிவதற்குள் பிரபாஸின் மனைவி யார் என ரசிகர்களுக்கு தெரிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காதல் கிசுகிசு...

காதல் கிசுகிசு...

முன்னதாக பாகுபலி படப்பிடிப்பின் போது, பிரபாஸுக்கும் தமன்னாவிற்கும் இடையில் காதல் மலர்ந்ததாக ஒரு தகவலும், இல்லையில்லை பிரபாஸும், அனுஷ்காவும் தான் காதலிக்கிறார்கள் என்று மற்றொரு தகவலும் உலா வந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Baahubali star Prabhas' paternal uncle Krishnam Raju, a veteran Telugu actor, said that Prabhas will get married by the end of 2016.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil