»   »  வேண்டாம் பிறந்த நாள் கொண்டாட்டம்! - தவிர்த்த பிரபு தேவா

வேண்டாம் பிறந்த நாள் கொண்டாட்டம்! - தவிர்த்த பிரபு தேவா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மார்ச் 3 ஆம் தேதி பிரபுதேவாவின் பிறந்த நாள். இந்த வருடம் தனது பிறந்த நாளான மார்ச் 3 ஆம் தேதி, பிரபு தேவா வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் சார்பில் கே.எஸ்.சீனிவாசன்-கே.எஸ்.சிவராமன் இருவரும் இணைந்து தயாரிக்கும் 'யங் மங் சங்' படத்தின் பட்டப்படிப்பில் இருந்தார். ஒரு கோவிலில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.

அவரது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட அந்தப் பகுதியில் இருந்த பிரபுதேவா ரசிகர்கள் மிகப் பெரிய கேக்கைத் தயார் செய்து படப்பிடிப்பு நடைபெற்ற கோவிலுக்கு கொண்டு வந்தனர்.

Prabhu Deva cancels birthday

ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்னர் அந்த படத்தின் படப்பிடிப்பில் நடந்த கார் விபத்தில் இரண்டு டிரைவர்களும் ஒரு தயாரிப்புப் பணியாளரும் இறந்து விட்டதால், பிறந்த நாளைக் கொண்டாடும் மன நிலையில் தான் இல்லை என்று கூறி, அந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தை ரத்து செய்யச் சொல்லிவிட்டார் பிரபுதேவா

இறந்தவர்களின் குடும்பத்துக்கு படக்குழு சார்பில் பண உதவி ஏற்கெனவே செய்யப்பட்டுவிட்டது.

English summary
Prabhu Deva was cancelled his birthday due to 2 of his Yung Mang Sung crew members death.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil