»   »  5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ்ப் படம் இயக்கும் பிரபுதேவா!

5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ்ப் படம் இயக்கும் பிரபுதேவா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

11 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தமிழில் மீண்டும் ஹீரோவாக அடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள பிரபு தேவா, அடுத்து ஒரு படத்தையும் இயக்கப் போகிறார்.

தேவி படத்தின் வெற்றியின் மூலம் மீண்டும் நாயகனாக தமிழில் தனது மறுபிரவேசத்தைத் தொடங்கியுள்ளார் பிரபு தேவா. அடுத்தடுத்த புதுப் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தாலும், மிக நிதானத்துடன் அடுத்த படத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

Prabhu Deva to direct Tamil movie after 5 years

ஆனால் இந்த முறை நடிக்க அல்ல, இயக்க. பிரபு தேவா கடைசியாக தமிழில் இயக்கிய படம் எங்கேயும் காதல். இந்தப் படத்தில் ஜெயம் ரவி - ஹன்சிகா நடித்திருந்தனர்.

இந்தப் படத்துக்குப் பிறகு இந்திக்குப் போய்விட்டார் அவர். இப்போதுதான் மீண்டும் தமிழில் படங்கள் இயக்க வந்துள்ளார்.

பிரபு தேவா புதிதாக இயக்கவிருக்கும் படத்துக்குத் தலைப்பு கறுப்பு ராஜா வெள்ளை ராஜா. கருப்பு ராஜாவாக விஷாலும், வெள்ளை ராஜாவாக கார்த்தியும் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தை பிரபு தேவாவின் ஆஸ்தான தயாரிப்பாளரும் பார்ட்னருமான ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

English summary
Prabhu Deva is going to direct a Tamil movie titled Karuppu Raja Vellai Raja starring Vishal and Karthi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil