»   »  அரவிந்த்சாமி வழியைப் பின்பற்றும் பிரபுதேவா!

அரவிந்த்சாமி வழியைப் பின்பற்றும் பிரபுதேவா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : பாலிவுட் படங்களை இயக்குவதில் ஆர்வமாகச் செயல்பட்ட பிரபுதேவா, 'தேவி' படத்தின் வெற்றிக்கு பின், நடிப்பில் முழுகவனம் செலுத்தி வருகிறார்.
ஹன்சிகாவுடன் அவர் நடித்து வரும் 'குலேபகாவலி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, திரைக்கு வரத் தயாராக உள்ளது. இந்தப் படத்தில், ஒரு பாடல் காட்சிக்காக, சென்னையில் இரண்டு கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட செட் போடப்பட்டுப் படப்பிடிப்பு நடந்ததை, ஆச்சரியத்துடன் பேசுகின்றனர் படக்குழுவினர்.

இந்தப் படத்துக்கு பின், லட்சுமி மேனனுடன் 'யங் மங் சங்' என்ற படத்திலும் ஹீரோவாக நடிக்கும் பிரபுதேவா, 'மெர்க்குரி' என்ற படத்தில் வில்லனாகவும் நடிக்கிறாராம். குறும்படங்களில் நடித்துவரும் சனத் ரெட்டி தான் இந்தப் படத்தின் ஹீரோவாம்.

Prabhu Deva follows the path of Arvindsamy

அரவிந்த்சாமியைப் போல் மாறுபட்ட வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர முடிவு செய்துள்ளாராம், பிரபுதேவா. அதற்காகவே இந்த வில்லன் கேரக்டர்களை ஏற்று நடித்து வருகிறாராம்.

English summary
After the success of the film 'Devi', Prabhudeva is paying full attention to acting. He is also acting as a villain in 'Mercury'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil