Don't Miss!
- Finance
மத்திய பட்ஜெட் 2023: நிறையத் தண்ணீர் குடிங்க.. பட்ஜெட் போர் அடிக்கலாம்..!
- News
இந்தியாவின் 'கனவு பட்ஜெட்' என அழைக்கப்பட்ட 1997-ம் ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட்..ஏன் தெரியுமா?
- Technology
BSNL சூப்பர் ரீசார்ஜ்: மாதம் ரூ.184 தான் செலவு 395 நாளுக்கு வேலிடிட்டி.! மாஸ் ஆன பிளான் இதான்.!
- Automobiles
ஃப்ரீனாலும் இந்த 5 ரயில்கள்ல மட்டும் போயிடாதீங்க... போனவங்க எல்லாம் கழுவி கழுவி ஊத்துறாங்க!
- Sports
2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
“நல்லா இடுப்ப வளைச்சு நெளிச்சு ஆடணும்”… மஞ்சு வாரியரை சுளுக்கெடுத்த பிரபுதேவா…
திருவனந்தபுரம்: மலையாள முன்னணி நடிகையான மஞ்சு வாரியர் தமிழில் அஜித்தின் 61வது படத்தில் நடித்து வருகிறார்.
மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்துள்ள ஆயிஷா திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
ஆயிஷா படத்துக்காக பிரபுதேவா, மஞ்சு வாரியர் கூட்டணியில் வெரைட்டியான அரபிக் குத்து பாடல் வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது.
சூப்பர்ஸ்டார்
பைக்
ரைடர்
அஜித்..
இமயமலையில்
ஏகே
61
ஹீரோயினுடன்
பைக்
ரைடு..
மஞ்சு
வாரியர்
பாராட்டு!

அசுரன் நாயகி மஞ்சு வாரியர்
மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் மஞ்சு வாரியர், தமிழில் அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படத்தில், மஞ்சு வாரியரின் நடிப்புக்கு சிறப்பான பாராட்டுகள் கிடைத்தன. அதேபோல், மலையாளத்தில் 2019ம் ஆண்டு வெளியான லூசிபர், மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிம்ஹம், லலிதம் சுந்தரம், ஜேக் அன்ட் ஜில் என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். அசுரன் படத்துக்கு பின்னர் அஜித்தின் 61வது படத்தில் நடித்து வருகிறார் மஞ்சு வாரியர்.

அஜித்துடன் பைக் டிரிப்
ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகும் அஜித்தின் 'ஏகே 61' படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அஜித்துடன் சேர்ந்து பைக் ட்ரிப் சென்று வந்தார் மஞ்சு வாரியர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட அஜித்துடன் பைக் டிரிப் சென்றிருந்த போட்டோக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். இதனிடையே மலையாளத்திலும் 'ஆயிஷா' என்ற படத்தில் நடித்துள்ளார் மஞ்சு வாரியர்.

பிரபுதேவாவுடன் கூட்டணி
அமீர் பள்ளிக்கல் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் கதை, திரைக்கதையை ஆஷிப் கக்கோடி எழுதியுள்ளார். கிராஸ் பார்டர் கேமரா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் ஜக்காரியா தயாரித்துள்ள 'ஆயிஷா' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படம் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், ஆயிஷா படத்தில் இருந்து செகண்ட் சிங்கிள் டிராக் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலுக்கு பிரபுதேவா கோரியோகிராப் செய்துள்ளார்.

கலக்கும் கண்ணிலு கண்ணிலு
'கண்ணிலு கண்ணிலு மெய்யெழுதின கண்ணிலு' எனத் தொடங்கும் இந்தப் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. ஜெயச்சந்திரன் இசையமைத்துள்ள இந்தப் பாடலை பி.கே.ஹரி நாராயணனும் சுகைல் கோயா இணைந்து எழுதியுள்ளனர். மலையாளமும் அரபியும் கலந்து உருவாகியுள்ள இப்பாடலுக்கு பிரபுதேவா வேற லெவலில் கோரியோகிராப் செய்துள்ளார். மஞ்சு வாரியருக்கு க்யூட்டான ஸ்டெப்களை பிரபுதேவா சொல்லிக் கொடுக்கும் மேக்கிங் வீடியோவுடன் இந்தப் பாடல் வெளியாகியுள்ளது. பிரபுதேவா, மஞ்சு வாரியர் காம்போவில் மலையாள ரசிகர்களுக்கான அரபிக் குத்து பாடலாக இது வைரலாகி வருகிறது.