தொடர்ந்து 5 படங்கள் பிளாப்…வேதனையில் பிரபுதேவா..பஹிரா படம் கைக்கொடுக்குமா?

சென்னை : பிரபு தேவா நடித்த ஐந்து திரைப்படங்களும் தொடர்ந்து பிளாப்பானதால் அவர் பஹிரா திரைப்படத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளார்.

இந்திய சினிமா ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட் நடன கலைஞராகவும் நடன இயக்குநராகவும் தனக்கே உரித்தான தனி ஸ்டைலான நடனத்தால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் பிரபுதேவா.

பல சூப்பர் ஹிட் படங்களை கொடுக்கும் வெற்றிகரமான இயக்குநராகவும் நட்சத்திர நடிகராகவும் வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

பொய்க்கால் குதிரை

பொய்க்கால் குதிரை

இவர் நடிப்பில் சமீபத்தில் ஆகஸ்ட் 5ஆம் தேதி ரிலீஸான திரைப்படம் பொய்க்கால் குதிரை,மினி ஸ்டூடியோ மற்றும் டார்க் ரூம் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள பொய்க்கால் குதிரை படத்தில் பிரகாஷ்ராஜ், வரலக்ஷ்மி சரத்குமார், ஷ்யாம், ஜெகன், ரைசா வில்சன் மற்றும் ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பல்லு ஒளிப்பதிவில் பொய்க்கால் குதிரை படத்திற்கு டி.இமான் இசை அமைத்துள்ளார்.

எடுபடவில்லை

எடுபடவில்லை

ஒற்றைக் காலுடன் மாற்றுத்திறனாளியான பிரபுதேவா, இதய நோயால் பாதிக்கப்பட்ட தனது மகள் ஆழியாவை காப்பாற்ற தொழிலதிபரான வரலட்சுமி சரத்குமார் மகளை கடத்தி பணம் வாங்க முடிவெடுக்கிறார். ஆனால், வேறு யாரோ வரலட்சுமியின் மகளை கடத்த பழி பிரபுதேவா மேல் விழுகிறது டான்ஸ், காமெடி, ஆக்சன், சென்டிமென்ட் என பிரபுதேவா மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

தொடர்ந்து படங்கள் பிளாப்

தொடர்ந்து படங்கள் பிளாப்

இதற்குமுன் வெளியான தேவி, தேவி 2 உள்ளிட்ட படங்கள் ஓரளவிற்கு வெற்றிக்கண்டது. மெர்குரி, சார்லி சாப்ளின் 2, பொன் மாணிக்கவேல், தேள், மைடியர் பூதம், பொய்க்கால் குதிரை அடுத்தடுத்து வெளியான ஒரு திரைப்படம் கூடவெற்றிபெறாததால், பிரபுதேவா கவலையில் ஆழ்ந்துள்ளார். அடுத்து வெளியாக உள்ள பஹீரா திரைப்படத்தை இவர் பெரிதும் நம்பி உள்ளார்.

Recommended Video

Poikkal Kuthirai Movie Review | Yessa ? Bussa ?| Poikkal Kuthirai|Prabhu Deva|*Review
பஹீரா

பஹீரா

பஹீரா திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். இவர் ஜிவி பிரகாஷ் நடித்த திரிஷா இல்லைனா நயன்தாரா, சிம்புவின் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் ஆகிய படங்களை இயக்கியவர் ஆவார். அவர் இயக்கியுள்ள மூன்றாவது படம் தான் பஹீரா.இப்படத்தில் ஜனனி, சாக்‌ஷி அகர்வால், காயத்ரி, அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், சஞ்சிதா ஷெட்டி என 6 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். அவர்களை காதலித்து ஏமாற்றும் சைக்கோ கேரக்டரில் பிரபுதேவா நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X