twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    படமாகும் எம்.எச் 370 கதை: கிரைம்கதை மன்னனுடன் இணையும் நடனப்புயல் பிரபுதேவா

    By Mayura Akilan
    |

    சென்னை: கிரைம்கதை மன்னன் ராஜேஷ்குமார் எழுதிய ‘வெல்வெட் குற்றங்கள்' நாவலை பிரபுதேவா படமாக இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    தமிழில் இல்லையாம் பாலிவுட்டில் படம் இயக்கப் போகிறாராம். 'வெல்வெட் குற்றங்கள்' கதை, காணாமல் போன மலேசிய விமானத்தை கருவாக கொண்ட கதை.

    ராஜேஷ்குமார் இதுவரை 1,500 நாவல்களும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். அவர் எழுதிய அகராதி, சிறுவாணி ஆகிய 2 நாவல்களும் ஏற்கனவே படமாக்கப்பட்டுள்ளன. 2 ஆயிரம் அடி சொர்க்கம் என்ற நாவல் இப்போது படமாகி வருகிறது.

    இதையடுத்து அவர், சரத்குமார் நடித்துள்ள 'சண்டமாருதம்' படத்துக்கு திரைக்கதை-வசனம் எழுதியிருக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

    மலேசியா விமானம் மாயம்

    மலேசியா விமானம் மாயம்

    மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் புறப்பட்டு சென்ற விமானம் எம் எச் 370 கடந்த மார்ச் 8ஆம் தேதி அதிகாலை நடுவானில் மாயமானது.

    தீவிர தேடுதல் வேட்டை

    தீவிர தேடுதல் வேட்டை

    இந்த விமானத்தை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் 25-க்கும் மேற்பட்ட நாடுகள் ஈடுபட்டன. களத்தில் உள்ளன. விமானத்தை தேடுவதற்காக 40க்கும் அதிகமான கப்பல்கள், 30க்கும் அதிகமான விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டும் கூட ஒரு சிறிய தடயத்தையும் கண்டறிய முடியவில்லை.

    கதைக்கு புதிய கரு

    கதைக்கு புதிய கரு

    மலேசிய விமானம் எம்எச்370 கடந்த ஆண்டு மார்ச் மாதம் மாயமானது. இந்த விவகாரம், சர்வதேச அளவில் விமானப் போக்குவரத்துத் துறையை கதிகலங்கச் செய்தது ஒருபுறம் இருக்க, உலகில் பல முன்னணி எழுத்தாளர்களுக்கும், கலைத்துறையில் இருப்பவர்களுக்கும் இந்த சம்பவம் ஒரு புதிய கருவை அளித்தது.

    திகில் கதை

    திகில் கதை

    எம்எச்370 மாயமாகி, பல மாதங்களாக விடை தெரியாமல் போகவே வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த மூன்று முக்கிய எழுத்தாளர்கள் காணாமல் போன விமானம் பற்றிய புத்தகமே எழுதி விட்டார்கள்.

    இதில் வேடிக்கை என்னவென்றால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு கூற்றை மையமாக வைத்து மலேசிய விமானத்தின் முடிவை எழுதியுள்ளனர்.

    சினிமா படமாக

    சினிமா படமாக

    அதே வேளையில், பிரபல ‘காமசூத்ரா 3டி' படத்தை இயக்கிய ரூபேஷ் பவுல் என்ற இந்திய சினிமா இயக்குநர் தனது நிறுவனத்தின் மூலம் மாயமான மலேசிய விமானம் எம்.எச்.370 பற்றிய படம் ஒன்றை தயாரித்துள்ளார்.

    பரபரப்பு

    பரபரப்பு

    ‘தி வானிசிங் ஆக்ட்: தி அன்டோல்டு ஸ்டோரி ஆப் த மிஸ்சிங் மலேசியன் பிளேன்' என்ற பெயரைக் கொண்ட அத்திரைப்படம் இதுவரை சொல்லப்படாத கதையைச் சொல்லும் என்றும் பரபரப்பை அந்த இயக்குநர் கொளுத்திப் போட்டுள்ளார்.

    ராஜேஸ்குமாரின் நாவல்

    ராஜேஸ்குமாரின் நாவல்

    இந்நிலையில், மாயமான இந்த விமானம் குறித்த சம்பவங்களின் அடிப்படையில் வெளிவந்த முதல் தமிழ் நாவலாக ‘வெல்வெட் குற்றங்கள்' கருதப்படுகின்றது. இந்த கதையைத்தான் படமாக எடுக்கப்போகிறாராம் பிரபுதேவா.

    ஹீரோவாக அக்ஷய் குமார்

    ஹீரோவாக அக்ஷய் குமார்

    இதுபற்றி ராஜேஷ்குமார் கூறும்போது, ''பிரபுதேவா திடீரென்று ஒருநாள் என்னுடன் தொலைபேசியில் பேசினார். நான் வார பத்திரிகையில் எழுதிய 'வெல்வெட் குற்றங்கள்,' இதுவரை யாரும் கற்பனை செய்திராத கதை என்றும், அதனால் அதை இந்தியில் படமாக்க ஆர்வமாக இருப்பதாகவும் கூறினார். அநேகமாக அந்த படத்தில், அக்ஷய்குமார் நடிப்பார் என்று தெரிகிறது. இதுதொடர்பாக பிரபுதேவா என்னுடன் அடிக்கடி பேசி வருகிறார்'' என்றார்.

    எம்.எச்.370க்கு என்ன ஆச்சு?

    எம்.எச்.370க்கு என்ன ஆச்சு?

    எம்எச்370 விமானத்திற்கு உண்மையில் என்ன நேர்ந்தது? என்று கண்டுபிடிக்கும் வரை மர்ம நாவல் பிரியர்களுக்கும், திகில் சினிமா ரசிகர்களுக்கும் இது போன்ற கதைகளுக்கு இனிமேல் பஞ்சமிருக்காது.

    English summary
    Director Prabhu Deva is taking a novel for his next flick and he has chose writer Rajeshkumar crime story for the film.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X