»   »  கலக்குது பாரு இவர் ஸ்டைலு.... "மைக்கேல்" சிலையை திறந்து வைத்த இந்திய "ஜாக்சன்"!

கலக்குது பாரு இவர் ஸ்டைலு.... "மைக்கேல்" சிலையை திறந்து வைத்த இந்திய "ஜாக்சன்"!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மைக்கேல் ஜாக்சன் சிலையை நடிகரும், இயக்குநருமான பிரபுதேவா சென்னை கல்லூரி வளாகம் ஒன்றில் திறந்து வைத்திருக்கிறார்.

தன்னுடைய அற்புதமான நடனத்தால் உலகில் உள்ள ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டிப் போட்டவர் மைக்கேல் ஜாக்சன்.

Prabhu Deva Opened Michael Jackson Statue

குறிப்பாக அவரின் ராப் நடனங்கள் உலகப் பிரசித்தம் பெற்றவை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மர்மமான முறையில் மைக்கேல் ஜாக்சன் இறந்து போனார்.

வருடங்கள் கடந்தும் அவரது மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படாமலேயே இருக்கின்றன.

இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் கல்லூரி வளாகம் ஒன்றில், மைக்கேல் ஜாக்சன் சிலையை 'நடனப்புயல்' பிரபுதேவா திறந்து வைத்திருக்கிறார்.

தலையில் தொப்பியுடன் மார்பில் கை வைத்தபடி, ஒருவிரலை நீட்டிக் காட்டுவது போல மைக்கேல் ஜாக்சன் சிலையை வடிவமைத்துள்ளனர்.

சிலையைத் திறந்து வைத்தபின் பிரபுதேவாவும் அதேபோன்று போஸ் கொடுத்தார். இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என பிரபுதேவா அழைக்கப்படுகிறார்.

10 வருடங்களுக்குப் பின் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னாவுடன் இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Last Tuesday Prabhu Deva Opened Michael Jackson Statue in Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil