»   »  பிரபு சாலமனையும் விட்டு வைக்காத பார்ட் 2 மோகம்... உருவாகிறது 'கும்கி 2'

பிரபு சாலமனையும் விட்டு வைக்காத பார்ட் 2 மோகம்... உருவாகிறது 'கும்கி 2'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விக்ரம் பிரபு- லட்சுமி மேனன் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த கும்கி படத்தின் 2 வது பாகத்தை விரைவில் எடுக்கப் போவதாக இயக்குநர் பிரபு சாலமன் தெரிவித்திருக்கிறார்.

விக்ரம் பிரபு - லட்சுமி மேனன் நடிப்பில் கடந்த 2012 ம் ஆண்டு வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த படம் கும்கி.யானைப் பாகனுக்கும், மலைவாழ் பெண்ணுக்கும் இடையிலான காதலை அடிப்படையாக வைத்து இப்படத்தை பிரபு சாலமன் இயக்கியிருந்தார்.

Prabhu Solomon's Kumki Sequel

விக்ரம் பிரபுவின் அறிமுகப் படமான கும்கி 5 கோடியில் உருவாகி சுமார் 40 கோடிகள் வரை பாக்ஸ் ஆபீஸில் வசூல் செய்தது. மேலும் நாயகன் விக்ரம் பிரபுவிற்கு இது ஒரு நல்ல அறிமுகப் படமாகவும் அமைந்தது.

இந்நிலையில் இப்படத்தின் 2 வது பாகத்தை விரைவில் உருவாக்கப் போவதாக இயக்குநர் பிரபு சாலமன் உறுதி தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது "தனுஷை வைத்து நான் இயக்கியிருக்கும் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது முடிந்ததும் கும்கி படத்தின் 2 வது பாகத்தை எடுக்கவிருக்கிறேன். இந்தப் படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கவும் திட்டமிட்டுள்ளேன்.

இந்தப் படத்தில் நடிக்கும் நடிக,நடிகையர் மற்றும் படப்பிடிப்புக் குழுவினர் குறித்து நான் இன்னும் முடிவு செய்யவில்லை. தனுஷ் படம் இந்த வருட மே அல்லது ஜூன் மாதத்தில் வெளியாகும்.

இது முடிந்ததும் கும்கி 2 படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிடுவேன்" என்று அவர் உறுதியாக தெரிவித்திருக்கிறார்.

கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான 'கயல்' திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் எடுபடவில்லை. இதனால் அறிமுக ஹீரோக்களை தவிர்த்து முன்னணி நடிகரான தனுஷ் பக்கம் தனது பார்வையை திருப்பினார்.

இந்நிலையில் இதுவரை இல்லாத விதமாக தற்போது பார்ட் படங்களின் மேலும் பிரபு சாலமன் கவனம் திருப்பியிருப்பது கோலிவுட்டினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

English summary
Director Prabhu Solomon said that, he would take Kumki 2 as soon as Possible.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil